வருக்கை – கடிதங்கள்-1

வருக்கை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

வருக்கை கதையை ரசித்துப் படித்தேன். அந்தக்கதையின் மைய வரியே “கிருஷ்ணன் கள்ளன்லா, நல்ல வருக்கைக் கள்ளன்’. திருடர்களை ஏன் பெண்களுக்குப் பிடிக்கிறது என்றால் அவர்களிடம் கிருஷ்ணனின் அம்சம் இருக்கிறது என்பதனால்தான். மானசசோரன் என்று கிருஷ்ணனுக்குப் பெயர். தமிழிலே உள்ளங்கவர்கள்வன். அவனை யாருக்குத்தான் பிடிக்காது?

 

சுவாமி

 

அன்புள்ள ஜெ

வருக்கை கதையின் அழகை பல கோணங்களில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஃபுல் ஃபார்மிலே இருக்கிறீர்கள். வாழ்க.

 

அந்தக்கதையில் கள்ளனுக்குக் கள்ளன் என்றால் ஆசான்தான். ஒரு வீட்டில் திருடி அவர்களுக்கே விற்று பத்துவருடம் வாழ்ந்திருக்கிறார். காற்றுபோல வந்துவிட்டுச் செல்பவர். ஆசான் என்று பெயர் ஏன் வந்தது? திருட்டில் ஆசான் என்பதனாலா?

 

அவருக்கு எல்லாமே தெரியும். தங்கன் அவரை வைத்துத்தான் விளையாடுகிறான். ஆசான் சொல்லும்வே என்று கூவிக்கொண்டே இருக்கிறான். ஆசானும் சரியாக திருப்பி பந்தை வீசுகிறார்.

 

அவ நல்ல குட்டியாக்கும் என்று தங்கன் சொல்லும்போது அது நல்ல குட்டிகளுக்க சொபாவமாக்கும் என்று ஆசான் சொல்கிறார். அந்த இடத்தில் சிஷ்யனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ளும் காட்சியைக் கற்பனை செய்துகொண்டேன்

 

எம். ராம்குமார்

முந்தைய கட்டுரைசக்திரூபேண- கடிதங்கள்-3
அடுத்த கட்டுரை’ஆனையில்லா!’- கடிதங்கள் -2