சக்திரூபேண- கடிதங்கள்-3

சக்தி ரூபேண! [சிறுகதை]

அன்புள்ள ஜெ

 

சக்தி ரூபேண கதை அளித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. அதன் அடுக்குகளை பேசிப்பேசித்தான் எடுக்கவேண்டும். ஆனால் அதற்குள் கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை

 

சக்தி ரூபேண கதையில் எனக்கு தோன்றிய வாசிப்பு  ‘அமிர்தம் கமய’ என்பதுதான். ஒருவகையான சாகாமையை அல்லவா எல்லா ஆன்ஸெல் அடைந்திருக்கிறாள். அவள் வந்தது உடலை குணமாக்க. அவள் அடைந்தது சாவின்மையை

 

அவள் கொடூரமாக கொல்லப்பட்டாள். ஆனால் அதே சிரிப்பும் குரலுமாக அங்கே இருந்துகொண்டிருக்கிறாள். அங்கேயே நெடுங்காலம் இருப்பாள். அவள் அங்கே ஒரு தெய்வம்போல இருந்துகொண்டிருப்பாள் என்று தோன்றியது

 

உலுக்கும் கதை. பலகோணங்களில் எண்ணங்களை திறக்கவைத்த கதை

 

ராஜ்குமார் மகேந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

சக்திரூபேண தலைப்புக்கு கதை எவ்வகையில் பொருந்துகிறது என்று பார்த்தேன். கீதையில் வரும் நா ஹன்யதே என்ற வரியை தலைப்பு வைக்கலாமோ என்றுகூட பிறகு தோன்றியது. கொல்லப்படமுடியாது. என் உடலைக் கொல்லலாம். ஆத்மா அழியாதது. அது அங்கே இருக்கும்

 

எல்லா கொல்லப்பட்டாள். கொல்லப்படாமல் மிஞ்சியிருப்பது என்னவாக இருக்கும். அவளுடைய ஆத்மா. அவள் அதைத்தான் அந்தப் பொம்மைகளில் மிச்சம் வைத்துச்சென்றாள். அவளுடைய மாயாரூபங்கள் என நினைக்கலாம். ஆனால் அவள் மற்றவர்களுக்கு என்ன கொடுத்தாளோ அதுதானே அந்த பொம்மைகளாக அங்கே மிச்சமிருக்கிறது?

 

ரா.கிருஷ்ணகுமார்

சக்திரூபேண- கடிதங்கள்-2

சக்தி ரூபேண- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–8
அடுத்த கட்டுரைவருக்கை – கடிதங்கள்-1