பாலைநிலப்பயணம் வாங்க
நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை கிண்டிலில் நூலாக பதிப்பித்திருக்கிறார்
அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று
பாலைநிலப்பயணம் – புகைப்படங்கள்