முழு மகாபாரத மொழியாக்கத்திற்குப் பின் அருட்செல்வப் பேரரசன் இன்னொரு பெரும்பணியை இன்று முதல் தொடங்கியிருக்கிறார். ஹரிவம்ச புராணத்தின் முழுமையான மொழியாக்கம். ஹரிவம்சம் மகாபாரதத்தின் பின்னொட்டு என்று கருதப்படுகிறது.16,374 பாடல்கள் கொண்ட பெருநூல் இது. பாகவதம். ஹரிவம்சம் இரண்டுமே கிருஷ்ணனின் வரலாற்றை, அதாவது மகாபாரதத்தில் கூறப்படாதவற்றை கூற பின்னர் உருவாக்கப்பட்டவை.
ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் சொல்கிறது. எனவே, இத்தகைய ஒரு படைப்பின் ஆங்கில மொழியாக்கம் பொதுமக்களின் வரவேற்பை நிச்சயம் பெறும் என நம்புகிறேன்.
– மன்மதநாததத்