கண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்

கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க

 

அன்புள்ள ஜெ.

 

நூலகத்தில் புத்தக  ரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி…மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் கிடைத்தன.  இவை இரண்டும்  தற்போது அச்சில் இல்லாத. நூல்கள் என நினைக்கிறேன்.    கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறையபேர் வாசித்திருக்கமாட்டார்கள். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் படித்த ஆறு நாவல்களின் பெயர் அப்புத்தகத்தில் இருந்தது மகிழ்சியளித்தது. மேலும் படிக்க.        நினைத்திருக்கும் மண்ணும் மனி          தரும் நாவல் பற்றிய கட்டுரையும் கூட இருந்தது.

 

இந்நாவல்களை வாசிக்கும் இளம் வாசகர்களுக்கு அதனை சரியாக தொகுத்துக் கொள்ள, நாவலின் சாரத்தை அணுக உதவும் மிக முக்கியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளது இதன் சில கட்டுரைகள் தளத்தில் இருக்கிறதென்றாலும் இந்நூல்    கையில் இருப்பது   இன்றைய சூழலில் ஒரு வழிகாட்டியாக இருக்குமென  நினைக்கிறேன்.  ஒரு இலக்கிய கூட்டத்தில் முக்கிய தமிழ் எழுத்தாளர் இருக்கையில் இப்புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டேன் அவருக்கே அது தெரிந்திருக்கவில்லை.

 

புத்தகம் நூலக ஆணைப்பெற்றிருக்கிறது எனவே மாவட்ட நூலகங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

 

 

கதிரேசன்

நாகை

அன்புள்ள கதிரேசன்

 

கண்ணீரைப் பின்தொடர்தல் இப்போது பதிப்பில் இல்லை என்பதே எனக்கு தெரியாது. பொதுவாக இந்நூல்களில் எவையெல்லாம் கிடைக்கின்றன , கிடைக்கவில்லை என்பதெல்லாம் என் நினைவிலேயே இருப்பதில்லை

 

கண்ணீரைப் பின்தொடர்தல் எனக்கும் முக்கியமான நூல். ஏனென்றால் நான் இலக்கியம் பற்றிச் சொல்லும் எல்லாக் கருத்துக்களுக்கும் முன்னுதாரணமாகக் காட்டும் நூல்கள் இவை. இவற்றுக்குச் சமானமான வெளிநாட்டு நூல்களைச் சொல்ல முடியும்தான். ஆனால் அவ்வாறு சுட்டும்போது சில சிக்கல்கள் உள்ளன.

 

முதன்மையான சிக்கல் இதுதான், வாசகர்களில் ஒருசாரார் அந்த மேலைநாட்டு நாவல்கள் காட்டும் வாழ்க்கைச்சூழலில்தான் அந்தவகையான அழகியலும் ஆழமும் இயல்வது என நினைத்துக்கொள்ளக்கூடும். அவ்வாறு நினைத்துக்கொள்கிறார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். அத்துடன் மேலைநாட்டு இலக்கியச் சூழலில் உள்ள உணர்வுநிலைகள், உறவுச்சிக்கல்கள்தான் அந்த ஆழத்தை உருவாக்குகின்றன என எண்ணிக்கொள்கிறார்கள். ஆகவே எந்தவகையான பின்புல அறிதல்களும் இல்லாமல் இங்குள்ள சில எழுத்தாளர்களும் தாங்களும் அந்த வாழ்க்கைச்சூழலை, உளநிலைகளை, உணர்ச்சிகளை நகலெடுக்க தொடங்குகிறார்கள்..

 

இங்கே நம் கண்முன் நம்முடைய சகமொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள் வழியாக நம் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவது மேலும் கூர்மையானது. ஆரோக்கியநிகேதனமோ மண்ணும் மனிதருமோ பேசும் சூழல்கள், உணர்ச்சிகள் , சிக்கல்கள் எல்லாமே நம்முடையவை. ஆகவேதான் அந்நாவல்களை முன்வைத்து அக்கட்டுரைகளை எழுதினேன். தமிழ் வாசிப்பில், இலக்கியச்சூழலில் அந்நூல் ஆழமான செல்வாக்கை உருவாக்கியிருக்கிறது என்றே நம்புகிறேன். இன்று அதில்பேசப்பட்டுள்ள நாவல்களை இலக்கியவாசகர்கள் பெரும்பாலானவர்கள் படித்திருக்கிறார்கள் என்பதே அதற்குச் சான்று

 

ஜெ

கண்ணீரைப் பின்தொடர்தல் கடிதம்

கண்ணீரைப் பின்தொடர்தல் கடிதம்

கண்ணீரைப் பின்தொடர்தல் கடிதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78
அடுத்த கட்டுரைபடம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்