மலேசிய உரைகள் -கடிதங்கள்

மலேசிய இலக்கிய முகாம் உரைகள்

அன்புள்ள ஜெ,

 

மலேசியாவில் நீங்கள் ஆற்றிய நான்கு உரைகளுமே சிறப்பானவை. இங்கே பேசும்போது இலக்கிய ஆர்வலர்களை, இலக்கியப் படைப்பாளிகளை முன்னால் பார்த்துக்கொண்டு பேசுகிறீர்கள். ஆனால் மலேசியாவில் பேசும்போது இலக்கிய அறிமுகம் மட்டுமே கொண்டவர்களை எதிர்நோக்கிப் பேசியிருக்கிறீர்கள். எளிமையாகவும் நேரடியாகவும் இருந்தன அந்த உரைகள். ஒருவேளை அவை ஓர் இலக்கியப்பட்டறையில் பேசப்பட்டவையாக இருந்தமையால் என நினைக்கிறேன். எளிமையான உரைகள் என்றாலும் பத்தாண்டுகளாக இலக்கியம் வாசிக்கும் என்னைப்போன்ற ஒருவனுக்கே அடிக்கடி வரும் ஐயங்களும் குழப்பங்களும் தீரும்படி அமைந்த உரைகள். அந்த உரைகளை அடிக்கடி கேட்டேன். தெளிவாக நேரடியாகச் சொல்கிறீர்கள். அவற்றை அடிக்கடி பலரிடம் சொல்லும் வழக்கம் உங்களுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். ஆகவே ஆணித்தரமாக அமைந்துள்ளன. நன்றி

 

எஸ்.செந்தில்முருகன்

 

அன்புள்ள ஜெ

மலேசிய உரைகள் நான்குமே அழகானவை. எளிமையானவையாக, அதேசமயம் விரிவானவையாக உள்ளன. எல்லா உரைகளுமே ஏறத்தாழ ஒரு மணிநேரம் உள்ளன. நிறைய குட்டிக்கதைகள் அனுபவகதைகள் உதாரணங்கள் ஆகியவற்றுடன் உள்ளன. இந்த விஷயங்களைப்பற்றி ஏற்கனவே நிறையப் பேசியிருக்கிறீர்கள். ஆனாலும் இப்போது பேசியவை முழுக்கமுழுக்க புதியவை. நாவல் பற்றி மலேசியாவிலேயே ஒரு நீண்ட உரையை ஆற்றியிருக்கிறீர்கள். ஆனாலும் இங்கே நாவலை பற்றி ஃபேக் எபிக், மாக் எப்பிக், மாடர்ன் எபிக் என்று பிரித்து பேசியிருக்கும் உரைகள் மிகமிகப் புதியவையாக உள்ளன. நன்றி

 

சரவணன்.எம்

 

 

 மரபு இலக்கியம் – ஜெயமோகன்

 

 

நாவல் எனும் கலை – ஜெயமோகன்

 

இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71
அடுத்த கட்டுரைஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்