அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…

எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து திரிந்து நம் முன்னோர்கள் பட்ட பாட்டை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எந்த நோக்கத்திற்காக அவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் மஹாபாரதத்தை மொழிபெயர்த்தனரோ கிட்டத்தட்ட அதே நோக்கத்திற்காகவே நானும் இப்பணியைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களில் சொற்ப அளவைக்கூட அனுபவிக்காத எனக்கே சில இழப்புகள் விரக்தியின் எல்லையைக் காட்டின என்றால், இப்பணிக்காக அவ்வளவையும் அனுபவித்த அவர்கள் நிச்சயம் மனிதப் பிறவிகள் அல்ல; தேவர்கள் ஆவர்

=====================================================================================

 

முழு மகாபாரதம் வரிசைப்படி படிக்க

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54
அடுத்த கட்டுரைஅறிவெதிர்ப்பும் ஆணவமும்