பத்து உரைகள் – கடிதங்கள்

ப்ரியம்வதா

பத்துநூல் வெளியீடு உரைகள்.

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை. மற்றபடி அனைவருமே சுருக்கமாகவும் சிறப்பாகவும் பேசினார்கள். எங்கும் எவரும் மீறிப்போகவோ திசைமாறவோ இல்லை. சுருக்கமாக புத்தகம் பற்றியே பேசினார்கள். கதைச்சுருக்கம் சொல்லிவிட்டு போகவும் இல்லை.

இளம்பேச்சாளர்களில் பிரியம்வதாவும், நவீனும் நன்றாகப் பேசினார்கள். நவீன் சுருக்கமாகப் பேசினார். முத்துக்குமார் மிகவும் தணிந்த குரலில் பேசினார். சுரேஷ்பாபு மயிலாடுதுறை பிரபு இருவரும் கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தேர்ச்சி தேவை. வெண்பா இன்னும் நிறைய பயிற்சி எடுக்கவேண்டும். தாளைப்பாக்காமல் பேசவேண்டும்

சாரதி

***

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகள் என்றபோது ஒரு அதிர்ச்சி. பத்து உரைகளா என்று. ஆனால் விரைவாக கேட்டு முடித்துவிட்டேன். பத்துப்பேருமே நூலை படித்துவிட்டு வந்து பேசினார்கள். நூல் பற்றிய சுருக்கமான மதிப்பீட்டை முன்வைத்தார்கள்.

சிறந்த உரை சுனீல் கிருஷ்ணனுடையது. இன்றைய காந்திகளுக்கும் இன்றைய காந்தியவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிக முக்கியமான ஒரு கருத்து. காந்தி ஏன் மகாத்மா என்றால் அவர் பல மகாத்மாக்களை உருவாக்கினார் என்பதனால் என்பது நீங்கள் சொன்ன வரி. அதைத்தான் நினைவுபடுத்திக்கொண்டேன்.

இளம்பேச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள். நூலாசிரியர்களை வாசித்துவிட்டு வாழ்த்துகிறேன்

செல்வக்குமார்

***

பிகு விழாவின் புகைப்படங்கள், மேடை ஒளியமைப்பு எல்லாமே பரிதாபமாக இருந்தன. ஆனால் சுருதி டிவி ஒளிப்பதிவும் ஒலியும் தரமானவை

 

சென்னையில் 2020 ஜனவரி 10 அன்று தியாகராஜர் அரங்கில் நிகழ்ந்த 10 நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்வில் சுரேஷ் பிரதீப் ஆற்றிய சிற்றுரை. கிரிதரன் ராஜகோபாலனின் ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை நூல் குறித்து’

 

நாகப்பிரகாஷ் எழுதிய எரி சிறுகதைத்தொகுதி பற்றி நவீன் உரை

வெண்பா கீதாயன் ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த ,மராட்டிய எழுத்தாளர் விலாஸ் சாரங்கின்  கூண்டுக்குள் பெண்கள் சிறுகதைத் தொகுதி குறித்து

காளிப்பிரசாத் மொழியாக்கத்தில் வெளிவந்த விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன் நூல் பற்றிய அறிமுக உரை

ஜா ராஜகோபாலன் எழுதிய ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூல் பற்றிய அறிமுக உரை, விஜயகிருஷ்ணன் திருச்சி

முத்துக்குமார் உரை. நரேந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் சிறுகதை நூல் பற்றி

விஜயராகவன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள தேரையின் வாய் சிறுகதை மொழியாக்கத் தொகுதி பற்றி சுரேஷ்பாபு

மயிலாடுதுறை பிரபு – சா.ராம் குமார் எழுதிய அகதி சிறுகதைத் தொகுதி பற்றி.

பிரியம்வதா உரை. சுசித்ரா எழுதிய சிறுகதை தொகுதி ஒளி குறித்து

சுனில் கிருஷ்ணன்  உரை. பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதிய இன்றைய காந்திகள் பற்றி

=============================================================================================================

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்

=============================================================================================================

பத்துநூலாசிரியர்கள்

 

 

Bala
 பாலசுப்ரமணியம் முத்துசாமி இன்றைய காந்திகள்

 

பத்து ஆசிரியர்கள்-1 பாலசுப்ரமணியம் முத்துசாமி [பாலா]

பாலசுப்ரமணியம் முத்துசாமி பேட்டி

விஜயராகவன் தேரையின் வாய்

பத்து ஆசிரியர்கள்-2, விஜயராகவன்

தேரையின் வாய்’ தொகுப்பிற்கான முன்னுரை

 

நாகப்பிரகாஷ் எரி

பத்து ஆசிரியர்கள்-3, நாகப்பிரகாஷ்

நாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை

ஸ்ரீனிவாசன் கூண்டுக்குள் பெண்கள்

பத்து  ஆசிரியர்கள்-4, ஸ்ரீனிவாசன்

 

நரேந்திரன் இந்தக்கதையை சரியாகச் சொல்வோம்

பத்து ஆசிரியர்கள்-5, நரேந்திரன்

நரேந்திரன் ‘இந்தக்கதையைச் சரியாகச் சொல்வோம்’- முன்னுரை

 

சா.ராம்குமார் அகதி

பத்து ஆசிரியர்கள் 6- ராம்குமார்

’அகதி’ ராம்குமார் முன்னுரை

 

சுசித்ரா ஒளி

 

பத்து ஆசிரியர்கள் 7- சுசித்ரா

பொற்றாமரையின் கதைசொல்லி- சுசித்ரா முன்னுரை

 

காளிப்ரசாத்  தம்மம் தந்தவன்

பத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரசாத்

 

கிரிதரன் ராஜகோபாலன் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

 

ராஜகோபாலன் ஆட்டத்தின் ஐந்து விதிகள்

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

=====================================================================================================

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

=====================================================================================================

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51
அடுத்த கட்டுரைஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா