கோணங்கி ஒரு கடிதம்

கோணங்கி தமிழ் விக்கி

Dear Jeyamohan….

your criticism on konangi’s novels is superficial. konangi is to be approached as a translator of Archetypal images. he is an original writer of postmodern tamil fiction.
if James Joyce can be understood then why not konangi ? if Finnegans’ Wake is possible why not Paazhi ? konangi communicates through images not by mere lexicon. he is more visual than verbal.

ganeshram krishnan
..

அன்புள்ள கணேஷ்ராம்,

உங்கள் பதில்தான் நான் சந்தித்தவற்றிலேயே மேலோட்டமானது என்று சொன்னால் வருத்தப்பட மாட்டீர்களே.

ஒருவர் சொல்கிறார், மேலாண்மை பொன்னுச்சாமி மிகநல்ல சிறுகதை ஆசிரியர். ஏனென்றால் அவர் யதார்த்தவாத எழுத்தாளர். டால்ஸ்டாயும் யதார்த்தவாதத்தை எழுதினார். டால்ஸ்டாய் நல்ல எழுத்தாளர் என்றால் ஏன் மேலாண்மை நல்ல எழுத்தாளர் இல்லை என்று.

கோணங்கி புரியவில்லை என்று நான் எங்குமே சொல்லவில்லை. அவர் மோசமாக எழுதுகிறார் என்றுதான் சொல்கிறேன்.

அவர் ஆழ்படிமங்களை பயன்படுத்தி எழுதுவதனால் அவர் எழுத்துக்கள் மோசம் என்று சொல்லவில்லை. அவர் உத்தேசிக்கும் அந்த எழுத்தை உருவாக்கும் மொழித்திறமையோ, ஆழ்படிமவெளியாக வரலாற்றையும் பண்பாட்டையும் பார்க்கும் விரிவான பார்வையோ அவரிடம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

ஆகவே ஒரே மாதிரியான செயற்கையான படிம உற்பத்தியும் ஒரே மாதிரியான சொற்குவியல்களை உருவாக்கும் நடையும் கொண்ட வெற்றுச்சத்தங்களாக அவை உள்ளன

கோணங்கியை நீங்கள் ஆழ்படிம எழுத்தின் சிறந்த மாதிரியாக கொள்வதே நீங்கள் ஜாய்சை படித்த லட்சணத்தை தெளிவாக்குகிறது.

எந்த எழுத்தும் என்ன வகை என்பதை வைத்து முக்கியத்துவம் பெறுவதில்லை. அதில் அது அடைந்தது எது என்பதை வைத்தே அதை மதிப்பிடுகிறோம் என்ற அடிப்படையையாவது காலப்போக்கில் நீங்கள் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஓலைச்சிலுவை [சிறுகதை] – 3
அடுத்த கட்டுரைதிற்பரப்பு