நாளை மறுநாள் சென்னையில்..

 

 

இந்த ஆண்டில் சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறத் தொடங்கியிருக்கின்றன. புத்தாண்டு தொடக்கத்தில் நண்பர்களுடன் இருந்தேன். தொடர்ந்து மதுரை, பாண்டிச்சேரி. இப்போது மீண்டும் சென்னையில். நாளை மறுநாள் [10-1-2020] சென்னையில் இருப்பேன். ஈரோடு பாண்டிச்சேரி தஞ்சை நண்பர்கள் வருகிறார்கள். அனைவரும் தங்குவதற்கு ஒரு பொதுவான இடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காலைமுதல் இலக்கிய அரங்கு ஒருவகையில் தொடங்கிவிடும்.

10 மாலையில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் பத்தாண்டு நிறைவு விழா. அது கோவையில் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. ஆனால் சென்னையில் நிகழும் நூல்வெளியீட்டை வெறும் நூல்வெளியீடாக அன்றி ஒரு நல்ல நண்பர்கூடுகையாகவும் கூடவே ஒரு இலக்கிய கருத்தரங்காகவும் நடத்தலாம் என்பதனால் இந்த திட்டம் உருவாகியது. எச்.எஸ்.சிவப்பிரகாஷ், கே.சி.நாராயணன், சு வேணுகோபால் மூவரின் பார்வைகளினூடாக ஒர் ஒட்டுமொத்த தென்னக இலக்கிய சித்திரம் உருவாகிவரும். அதன்பின் நூல்வெளியீடுகள்.

கூடுமானவரை அனைத்து நண்பர்களும் கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

***

முந்தைய கட்டுரைபத்து ஆசிரியர்கள்-8- காளிப்ரஸாத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40