அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
“ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை செய்யத் தொடங்குங்கள்…”
முதன்முதலாக விஷ்ணுபுரம் விழாவைத் திட்டமிட்டபொழுது, உங்களுடைய மேற்கண்ட வரிகளின் மனவுச்சத்தில்தான் நீங்கள் இருந்திருப்பீகள் என்று நாங்கள் நினைத்துக்கொள்கிறோம். விஷ்ணுபுரம் நண்பர்களின் பேருழைப்பால் ஒவ்வொரு வருடமும் இந்த சாத்தியம் நிகழ்ந்துகொண்டே இருப்பதில் அளவற்ற அகமகிழ்வடைகிறோம். எல்லா கரங்களுக்கும் நெஞ்சின் நன்றிகள். விரிவானதொரு கடிதத்தின் வழியாக உங்களிடம் மீண்டும் எங்களுடைய நன்றியையும் அனுபவத்தையும் விரைவில் பகிர்கிறோம். வினோத் பாலுச்சாமி அவர்கள் விழாவின் இரண்டாவதுநாள் காட்சிப்படுத்திய ஒளிப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நிறைவின் நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி