கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

கே.ஜி.சங்கரப்பிள்ளை அவர்களின் கவிதைகள் உங்கள் தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது – கொஞ்சம் அரசியல் பேசி தன்னை தானே கவனிக்கும் ஒவ்வொருவருக்கும் ” நெஞ்சோடு கிளத்தல் வகையிலான கவிதைகள் இவை அனைத்தும்.

 

 

முழுதாக வசித்தாலும் துண்டாக நாலைந்து வரி வாசித்தாலும் இக்கவிதைகள் தரும் அனுபவங்கள் மிகவும் புதியவை,மனம் ஏற்கனவே அறிந்ததை சரியாக சுட்டும் வார்த்தை அடுக்குகள் – என்ன ஒரு பகடி – என்ன ஒரு நேர்மை – நன்றி – நிற்காது தொடர்ந்து உங்கள் தளத்தில் வந்து கொண்டே இருக்கும் என்ற பகற்கனவில்

நண்பனுடன் உரையாடுவது போல – சில நேரங்களில் தொடர் உளறல் போல உளறுகையில் சரியான வாதம் அமைவது போல – வாழைப்பழம் என்னும் இனிப்பான ஒரு முடிவு – அபாரம் – தங்களது மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன் – மீண்டும் நன்றி

அன்புடன்
மணிகண்டன்

 

 

அன்புள்ள ஜெ

 

கே.ஜி.சங்கரப்பிள்ளைக் கவிதைகள் புதியவையாக உள்ளன. முள்ளம்பன்றி கவிதையை ஒரு புன்னகையுடன் படிக்க முடிகிறது. நீ தோற்றுப்போன அவதாரமா என்ற வரியில் கவிதை முடிந்தாலும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாசிக்கையில் இன்னொரு வடிவம் கிடைக்கிறது. இந்தக்காலத்தில் நாம் அனைவருமே முள்ளம்பன்றிகள்தான். சக உயிர்கள் மீதான அச்சம், உலகம் மீதான அச்சம். ஆகவே முள்ளாக உடம்பை ஆக்கிக்கொண்டிருக்கிறோம். முள்ளால் ஆன ஒரு கோட்டையே நம் உடம்பாக ஆகியிருக்கிறது. நாம் வரவிருக்கும் அவதாரம்

 

டி.ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

விரலெழுதி விரலெழுதி என்ற வரி மனசிலேயே சுற்றி வருகிறது. ஒரு ரயிலில் விடைபெறும் இருவர். ஆணும்பெண்ணு. அவர்கள் விரல்களால் மாறிமாறி எழுதிக்கொள்ளும் ஒரு மொழி உள்ளது. அவர்கள் மட்டுமே அறிந்த மொழி. எவருமே அறியாமல் நிகழும் ஒரு மொழி. அபாரமான சொல்லாட்சி

 

ஆர்.சாந்தகுமார்

 

கொலை,டால்ஸ்டாய்,முடி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

வீடு,விரல்,கஞ்சி – கே.ஜி.சங்கரப்பிள்ளை

வழி, சூரியன்,ராமன் : கே.ஜி.சங்கரப்பிள்ளை

சுழல்,எலி,மேடை – கே.ஜி.சங்கரப்பிள்ளை

வேதம்,இறந்தோர்,முள்ளம்பன்றி: கே.ஜி.சங்கரப்பிள்ளை

புத்தன்,கழுகு,பலா – கே.ஜி.சங்கரப்பிள்ளை

சோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை

காலியிடங்களும் கரிக்கலையங்களும்- கே.ஜி.சங்கரப்பிள்ளை

வரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்