மலேசியப் பயணம்

இன்று திருவனந்தபுரத்திலிருந்து மலேசியாவுக்குக் கிளம்புகிறேன். நேராக பினாங்கு, அங்கிருந்து கூலிம். கூலிம் ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவும் என் இனிய நினைவுகள். மலேசியா என்றாலே கொலாலம்பூர்தான் பெரும்பாலானவர்களின் நினைவில். நான் மலேசியாவின் உள்ளூர் முகம் என அறிந்த ஊர் கூலிம்தான்.

 

நான் 2006ல் முதல்முறையாக மலேசியா சென்றேன். சிங்கப்பூரிலிருந்து சண்முகசிவா – நவீன் ஆகியோரின் அழைப்பின் பேரில். அதன்பின் பலமுறை. ஆனால் கூலிம் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றபோதுதான் மலேசியாவின் முழுமையை அறிந்துகொண்டேன் என்று சொல்லவேண்டும். மலேசியாவின் உண்மையான பிரச்சினைகளையும்

 

சுவாமி பிரம்மானந்தர் சின்மயானந்தரின் வழிவந்த சுவாமி தயானந்தரின் மாணவர். அவருடைய குருநிலை அடிப்படையில் அத்வைத நோக்கு கொண்டது. ஆனால் மலேசியச்சூழலில் அது ஒரு விரிவான பண்பாட்டுமையம். சைவசித்தாந்தம் முதல் நவீன இலக்கியம்வரை அதன் செயற்களம். பண்பாட்டுப் பிரச்சினைகள், சமூகப்பணி முதல் மலேசியாவின் மக்களின் அன்றாடப்போராட்டம் வரை அது ஈடுபடுகிறது. சுவாமி பிரம்மானந்தர் அவருடைய தன்னலமற்ற போராட்டம், இயல்பான எளிமை ஆகியவற்றால் அங்குள்ள தமிழர்களின் ஒரு மையமாக ஆகிவிட்டவர்

 

ஏற்கனவே கூலிம் குருநிலையில் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. புதிய குருநிலை கட்டப்பட்டபின் ஒரு இலக்கிய முகாம் அங்கே நடந்தது. மீண்டும் அங்கே செல்கிறேன். விருது, இனிய நண்பர்கள் என ஒருவாரம் நிறைவான அனுபவங்களாலானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

 

 

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்

மலேசியாவில் இருந்து திரும்பினேன்

பினாங்கில் நான்காம்நாள்..

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்

கெடா

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2

பினாங்கிலே…

பேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்

மலேசியாவிலே

மலேசியா பயணம்

மலை ஆசியா – 6

மலை ஆசியா – 5

மலை ஆசியா – 4

மலை ஆசியா – 3

மலை ஆசியா – 2

மலை ஆசியா – 1

திரும்புதல்

மலேசியா பயணம்

 

முந்தைய கட்டுரைசோலை,பயம், உறக்கம்: கே.ஜி.சங்கரப்பிள்ளை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 20