அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவின் செய்திகள் தொடர்ந்து உங்கள் தளத்தில் வந்துகொண்டிருப்பது அளிக்கும் உள்ளக்கிளர்ச்சி அபாரமானது. நான் இரண்டுமுறை விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருக்கிறேன். இந்தமுறையும் வருகிறேன். நீங்கள் பலமுறை எழுதியிருப்பதுபோல ஒரு திருவிழா மனநிலை வந்தால் மட்டும்தான் நம்மால் இப்படி நாள்முழுக்க இலக்கியம் இசை போன்றவற்றில் மூழ்கிக் கிடக்க முடியும். விஷ்ணுபுரம் விழாவில் எப்போதுமே அந்த தீவிரமும் பித்தும் இருக்கிறது. இந்தமுறையும் சிறப்பாக நிகழும் என நினைக்கிறேன்.
ஆர்.சங்கர்
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விவாத அரங்கில் நான் ஆர்வத்துடன் கவனிப்பது எத்தனை இளம் படைப்பாளிகளுக்கு இடமளிக்கப்படுகிறது என்பதுதான். முதல்முறை அரங்கில் நேர்ப்பாதிப்பேர் இளம்படைப்பாளிகள். சென்றமுறையும் பலர் இருந்தனர். இந்தமுறை இளம்படைப்பாளி என்றால் வெண்பா கீதாயன் மட்டும்தான். சிறப்பாக எழுதுபவர்களை அடையாளப்படுத்தும் பொறுப்பும் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு உண்டு என நினைக்கிறேன்
எஸ்.ராஜன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2010 புகைப்படங்கள்
விஷ்ணுபுரம் விருது 2013 – புகைப்பட தொகுப்பு
விஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்
விருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2
விஷ்ணுபுரம் விருதுவிழா 2015 புகைப்படங்கள்