வரும் டிசம்பர் 19 முதல் 26 வரை மலேசியாவில் பயணம் செய்யவிருக்கிறேன். அருண்மொழியும் உடன் வருகிறாள். மலேசியாவில் கூலிம் தியான ஆசிரமத்தில் நிகழும் கூடுகைகளில் நான்கு நாட்கள் உரையாற்றுகிறேன். மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தா நெடுநாட்களாகவே என் வணக்கத்திற்கும் அணுக்கத்திற்கும் உரியவர். பலமுறை நண்பர்களுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கியிருக்கிறேன். மலேசிய இலக்கிய – ஆன்மிகச் செயல்பாடுகளின் மையமாக அந்த குருநிலை திகழ்ந்துவருகிறது.
ஆண்டுதோறும் கூலிம் ஆசிரமத்தின் சார்பில் வழங்கப்படும் விருது எனக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன் இவ்விருது இசைச்சுடர் சிவசுப்ரமணியம், டாக்டர் எல்.ஜெயபாரதி, பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ், வயலின் கலைஞர் ஜெயலட்சுமி, குலவீரசிங்கம், சங்கபூஷணம் ருக்மிணி அம்மாள், கர்னல் கரு. சாத்தையா, மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது
மலேசியாவில் ம.நவீன் அவர்களின் நாவலாகிய பேய்ச்சி வெளியீட்டுவிழாவிலும் கூலிம் ஆசிரமத்தில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கிலும் கலந்துகொள்கிறேன்.
தொடர்புக்கு
[email protected]
[email protected]
மூன்று நாள் இலக்கிய முகாம் டிசம்பர் 20,21 மற்றும் 22
https://dhyanaashram.wordpress.com/