விஷ்ணுபுரம் விருதுவிழா சிறப்பு விருந்தினர்கள் இதுவரை

அன்புள்ள ஜெ

கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்திகளை வாசிக்கையில் எல்லாம் நினைத்துக்கொள்வேன், அப்படியொரு இலக்கிய விழா சென்னையில் இல்லையே என்று. இத்தனை எழுத்தாளர்கள் ஓரிடத்தில் கூடி இடைவிடாமல் இலக்கிய விவாதம் நிகழ்வதும் இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் கூடுவதும் மிகமிக அரிதான நிகழ்ச்சிகள். நான் 2013 ஆம் வருடம் மட்டும் வந்து கலந்துகொண்டேன். டிசம்பர் முடிவில் லீவு எடுத்துக் கிளம்புவது மிகவும் கடினமானது. ஒருநாள் என்றால்கூட வந்துசெல்லலாம். கோவையில் இது ஒரு அருமையான நிகழ்ச்சி என நினைக்கிறேன்

அதிலும் விழா விருந்தினர்களுக்கு கூடுதலாக அழைக்கப்படும் விருந்தினர்களும் அவர்களை நீங்கள் முறையாக அறிமுகம் செய்வதும் ஒரு முக்கியமான இலக்கியச் செயல்பாடு. அதில் பலவகையான எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறீர்கள். இளம் எழுத்தாளர்கள் முதல்முறையாக மேடையேறுகிறார்கள். ஆரம்பநிலை எழுத்தாளராக மேடைக்குவந்த சுரேஷ்பிரதீப், சுனீல்கிருஷ்ணன், விஷால்ராஜா போன்றவர்களெல்லாம் இன்று அறியப்படும் எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள்.

வாழ்த்துக்கள்

எஸ்.ஜெயக்குமார்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்கள்

2010 விருதுபெற்றவர் ஆ.மாதவன்

மணிரத்னம்

வேதசகாயகுமார்

புனத்தில் குஞ்ஞப்துல்லா

2011  விருதுபெற்றவர் பூமணி

பிரதீபா நந்தகுமார்

பாரதிராஜா

எஸ்.ராமகிருஷ்ணன்

2012 விருதுபெற்றவர் தேவதேவன்

இளையராஜா

நாஞ்சில்நாடன்

கல்பற்றா நாராயணன்

2013 விருதுபெற்றவர் தெளிவத்தை ஜோசப்

பாலா

இந்திரா பார்த்தசாரதி

2014 விருதுபெற்றவர் ஞானக்கூத்தன்

புவியரசு

வசந்தபாலன்

சா.கந்தசாமி

2015 விருதுபெற்றவர் தேவதச்சன்

வெற்றிமாறன்

யுவன் சந்திரசேகர்

ஜோ டி குரூஸ்

2016விருதுபெற்றவர் வண்ணதாசன்

எச்.எஸ்.சிவப்பிரகாஷ்

நாசர்

இரா முருகன்

கு சிவராமன்

பவா செல்லத்துரை

2017 விருதுபெற்றவர் சீ முத்துசாமி

ஜனிஸ் பரியத்
பி.ஏ.கிருஷ்ணன்

ம.நவீன்

2018 விருதுபெற்றவர் ராஜ் கௌதமன்

அனிதா அக்னிஹோத்ரி

தேவிபாரதி

ஸ்டாலின் ராஜாங்கம்

மதுபால்

2019ல் விருது பெற்றவர் கவிஞர் அபி

சிறப்பு விருந்தினர்கள்

ரவி சுப்ரமணியம்
பெருந்தேவி
ஜான்னவி பரூவா
கே.ஜி.சங்கரப்பிள்ளை

2020 விருது பெற்றவர் சுரேஷ்குமார இந்திரஜித்

2020 விருது கோவிட் காலமானதனால் அறைக்குள் நடத்தப்பட்டது நண்பர் ராம்குமார் இ.ஆ.ப விருது அளித்தார்.

ராம்குமார்

2021 விருது பெற்றவர் கவிஞர் விக்ரமாதித்யன்

சிறப்பு விருந்தினர்கள்

ஜெய்ராம் ரமேஷ்

இயக்குநர் வசந்த்

எழுத்தாளர் சோ.தர்மன்

 

ci

சின்னவீரபத்ருடு

முந்தைய கட்டுரைபிழைத்தலும் வாழ்தலும்!
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு