கோணங்கியும் மார்க்ஸும்

கோணங்கி தமிழ் விக்கி

தொண்ணூற்றி ஆறில் கோணங்கி தர்மபுரிக்கு வந்திருந்தார். நான் அவருடன் கிளம்பி சேலம் சென்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இரவுறங்கி கிரானைட் தொழிலில் இருந்த அவரது தம்பி வீட்டுக்குச் சென்றேன். செல்லும் வழியில் அ. மார்க்ஸ் பற்றி பேச்சு வந்தது. அவரது இலக்கியஞானம் பற்றி நான் சிரித்தேன்.

‘டேய் அவருக்கு நல்ல தைரியம் இருக்குடா… இலக்கியம் பத்தி போல்டா பேசறார். அவருக்கு மட்டும் இலக்கியம் பத்தி ஏதாவது தெரிஞ்சிருந்தா அந்த தைரியம் வந்திருக்குமா சொல்லு? அப்டி ஒரு ஆளு இப்ப தேவைதான்’ என்று படு சீரியஸாக கோணங்கி சொன்னார். எனக்கு ஒரு நிமிஷம் புரியவில்லை. அதன் பின் அந்த பயணம் முழுக்க நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தேன். கோணங்கியின் கிண்டல்களை எவரேனும் தனியாக எழுதலாம்.

அப்போது நான் கிண்டல் செய்த நிகழ்ச்சி இதுதான். கோணங்கியின் கதை நிறப்பிரிகையில் வெளிவந்த அழகு. காலச்சுவடில் கண்ணன் அதை எடுத்து கொடுத்திருக்கிறார்

http://www.kalachuvadu.com/issue-134/page22.asp [பின் நவீனத்துவம் என்ற உபதலைப்பு]

மீண்டும் சிரித்துக்கொண்டேன். அபப்டியே அவர் அதை தொகுப்பில் சேர்த்திருந்தால் இன்று அந்தக்கதைக்கு என்னென்ன பின்நவீனத்துவ வாசிப்புகள் சாத்தியப்பட்டிருக்கும்!

முந்தைய கட்டுரைதாயார் பாதம், இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூறுநாற்காலிகள்-கடிதங்கள்