விஷ்ணுபுரம் விழா ஆவணப்படங்கள்

அன்புள்ள ஜெ

 

அபி ஆவணப்படம் முன்னோட்டம் பார்த்தேன். நல்ல ஒளிப்பதிவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இயல்பான நடையும் தயக்கமான பேச்சும் எழுத்தும் எல்லாம் அந்த முன்னோட்டத்திலேயே வெளிப்படுகிறது. அழகான ஆவணப்படமாக அமையும் என நினைக்கிறேன்.

 

கே.பி.வினோத் முன்னர் எடுத்த இரண்டு ஆவணப்படங்களுமே நேர்த்தியானவை. அவை ஞானக்கூத்தன், ராஜ்கௌதமன் ஆகிய இரண்டு ஆளுமைகளை தெளிவாகக் காட்டியவை. அவருக்கும் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கவிஞர் ராஜாசந்திரசேகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள். இசையும் மென்மையாகவும் அழகாகவும் இருந்தது. அபி கவிதைகளின் மனநிலைகளுடன் ஒத்துப்போவதாக அமைந்திருந்தது

 

ஜி.நாராயணன்

 

அன்புள்ள ஜெ

 

விஷ்ணுபுரம் ஆவணப்படங்களை ஆர்வத்துடன் பார்த்தேன். முக்கியமான ஒரு பணி இது என நினைக்கிறேன். இந்த நவீன ஒளிப்பதிவு யுகத்தில் ஒரு நல்ல ஆப்பிள் செல்போன் இருந்தால்கூட செய்துவிடக்கூடிய பணிதான். ஆனால் எவரும் செய்வதில்லை. இப்படி ஆர்வம்கொண்ட ஓர் அமைப்பு முயற்சி எடுத்துக்கொண்டால் மட்டும்தான் நடக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களான வண்ணதாசன், ஞானக்கூத்தன் ஆகியோரை ஆவணப்படத்தில் பார்த்தது மகிழ்ச்சி அளித்தது. அதிலும் ஞானக்கூத்தனை இப்போது பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஒரே ஒரு ஆவணம்மட்டுமே அவரைப்பற்றி இருக்கிறது. அவருடைய நடையும் பேச்சும் சிரிப்பும் அற்புதமாக பதிவாகியிருக்கிறது.

 

அவர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டபோது சென்னையில் அவரிடம் பேசியிருக்கிறேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அசோகமித்திரனுக்கும் பிடித்திருந்தது. மிகவும் புகழ்ந்துபேசினார் அன்றைக்கு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

 

டி.ராமகிருஷ்ணன்

 

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

 

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல்

 

 

 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

 

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்

 பாட்டும் தொகையும் ராஜ் கௌதமன் ஆவணப்படம்

இயக்கம் கே பி வினோத்

 

 

முந்தைய கட்டுரைபிரமிள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்