அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

விசும்பு அறிவியல் சிறுகதைகள் வாங்க

 

வணக்கம்!

 

உங்களின் விசும்பு சிறுகதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலேயே பெரும்பாலும் எழுதி, படிக்கும் பழக்கம் உள்ள எனக்கு தமிழில் சயின்ஸ் பிக்ஸன் கதைகள் தேடிப் படிப்பதில் ஒரு தனி ஆர்வம்.

 

உங்களின் விசும்பு புத்தகம் மிக அருமை. “தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை” பகுதியில் நீங்கள் குறிப்பிடும் மூலையில் பொருத்தப்படும் இம்பிளான்ட்கள் இப்பொழுது உண்மையிலேயே பிரபலமடைய ஆரம்பித்துவிட்டன. கவனித்தீர்களா? Elon Musk- ன் Neuralink நிறுவனம் ஓர் எடுத்துக்காட்டு. ஆச்சர்யம் தான்.

 

விசும்பு தொகுப்பின் விமர்சனம் எனது பிலாக்கில் ஒரு பதிவாக்கியுள்ளேன். நேரம் கிடைத்தால் படியுங்கள்.

 

 

உங்கள் படைப்புகளை மேலும் படிக்க ஆர்வத்துடன் உள்ளேன்.

 

நன்றி.

 

பிரிதிவி ராஜ்

பெங்களூரு

 

 

அன்புள்ள ஜெ

 

விசும்பு அறிவியல்புனைகதைகள் தொகுதியை இப்போதுதான் வாசித்தேன். தமிழில் நான் வாசித்த முக்கியமான அறிவியல்புனைகதைத் தொகுதி இது. அறிவியல்புனைகதை என்பது எப்படி அன்றாடவாழ்க்கையுடன் சம்பந்தப்படுகிறது எப்படி உயர்தத்துவத்தை கையாள்கிறது என்னும் இரண்டு கேள்விகள்தான் அறிவியல்புனைகதை எழுதுவதில் முக்கியமானவை. பெரும்பாலான அறிவியல்புனைகதைகள் விறுவிறுப்பான கற்பனைகள் என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. இக்கதைகளில் பித்தம் சிறந்த உதாரணம். அது ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கதை. நாம் அறிந்த யதார்த்தம். ஒவ்வொருவரின் குடும்பத்திலும் ரசவாதத்தால் அழிந்த ஒரு மூதாதை இருப்பார். கூடவே அந்தக்கதை உயர்தத்துவத்தை கையாள்கிறது. அனைத்தையும் பொன்னாக்கும் ஓரு நிலையைப்பற்றிப் பேசுகிறது. எல்லா உலோகமும் ஒரே உலோகமே என்று ஒரு பெரிய அறிவைநோக்கிய பயணமாக அந்த கலையை விளக்குகிறது. ஒரு மாஸ்டர்பீஸ் கதை அது

 

வாழ்த்துக்கள்

 

டி.கே.மகேஷ்குமார்

விசும்பு மதிப்பீடு

முந்தைய கட்டுரைபாரதியும் ஜெயகாந்தனும்
அடுத்த கட்டுரைசொற்சிக்கனம் பற்றி…