சகஜயோகம்
அன்புள்ள ஜெ
சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதில் ஓர் அமைப்புசார்ந்து செயல்படுபவர்களிடம் இருக்கும் அளவில்லாத காழ்ப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் சொல்லவிட்டுப்போனது புலிகள் இயக்கம் பற்றி. நானும் அதில் இருந்தவன். புலிகளின் மொத்த இருபத்தைந்தாண்டுக்காலச் செயல்பாட்டிலும் துரோகிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் மையமாக நிகழ்ந்தது. யார் வேண்டுமென்றாலும் துரோகி ஆகிவிடலாம். எப்போதுவேண்டுமானாலும் எந்தக்காரணமும் இல்லாமல் அப்படி ஆகவேண்டியிருக்கும். யார் வேண்டுமென்றாலும் அப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டாலே போதும்.
தமிழ்நாட்டில் சும்மா வசைதான். இங்கே கொலை. அதன்பிறகுதான் அவதூறு. அடுத்த கொலை நடக்கும்போது இந்தக்கொலைக்குரியவரை அவர்களின் வீட்டார்தவிர எல்லாருமே மறந்துவிடுவார்கள். ரஷ்யாவிலும் கம்போடியாவிலும் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கு கொரியாவில் அதுதான் நடக்கிறது இந்தவகையான இயக்கங்களின் மனநிலை அது. அதை ஒரு ஃபினாமினான் ஆகவே புரிந்துகொள்ளவேண்டும்
கிரி
அன்புள்ள ஜெ
சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். அதன் கடைசிவரி புன்னகைக்க வைத்த்து சகஜயோகம். அதன்பிறகுதான் படத்தையும் பார்த்தேன். உங்களிடம் சோர்வென்பதே இல்லை என்பதையும் விரக்தி சலிப்பு ஆகியவற்றுடன் நீங்கள் பேசி கேட்டதே இல்லை என்பதையும் நானே கண்டிருக்கிறேன். அதற்குக் காரணமே இப்படி எதிலும் தீவிரப்பிடிப்பு இல்லாமல் அதேசமயம் தீவிரமாகச் செய்யும் இயல்புதான் என்று தெரிகிறது. அதற்கான உவமையும் அழகாக இருந்தது
டி.சரவணன்
அன்புள்ள ஜெ
நான் உங்களை வாசிக்க வந்ததே வசைகளைக் கண்டுதான். அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் என்று நினைப்பேன். வந்தால் வசைபாடப்படுவதற்கும் நீங்கள் எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிந்தது. பெரும்பாலும் நீங்கள் சொல்வதை திரித்து எழுதித்தான் அவர்கள் வசைபாடுகிறார்கள். உங்கள் கருத்துக்கள் பெரும்பாலும் எதிர்கொள்ளப்படாமலேயே இருக்கின்றன. சும்மா சொல்கிறேன், நானே ஒரு நல்ல பதிலை எழுதினாலென்ன என்றுகூட தோன்றும்.
அதிலும் இந்துத்துவர்கள். அவர்கள் நீங்கள் நடுவிலே துரோகம் செய்துவிட்டதாக சொல்லிக்கொண்டே இருப்பதைக் காண்கிறேன். 2008ல் இந்த தளம் ஆரம்பித்த நாள்முதல் ராமஜன்மபூமி முதல் அத்தனை விஷயங்களிலும் நீங்கள் ஒரே நிலைபாட்டை வலுவாக எடுத்துமுன்வைக்கிறீர்கள்.இவர்கள் சௌகரியமானவற்றை மட்டுமே வாசிப்பவர்கள்
செந்தில்குமார்
அவதூறுகள் ஏன்?
வசைகள்
அவதூறுகள் குறித்து…
இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்
கருத்தியலில் இருந்து விடுதலை
இந்துத்துவ முத்திரை
முத்திரைகள்
அ.மார்க்ஸின் ஆசி
இணைய உலகமும் நானும்
பெண்களின் அறிக்கை
புழுக்களும் சினிமாவும்
மொழி 6,மலையாளவாதம்
அவதூறு, கடிதம்
லோஸா
சில வம்புக்கடிதங்கள்…