அஞ்சலி : இயக்குநர் அருண்மொழி

 

‘காணிநிலம்’ ”ஏர்முனை’ போன்ற திரைப்படடங்கள் வழியாக அறியப்பட்டவர் இயக்குநர் அருண்மொழி. தமிழில் ஒரு கலைப்பட இயக்கத்தை உருவாக்க முயன்றவர்களில் ஒருவர். தமிழில் அதற்கான எந்த அறிவுப்புலமும் இல்லை. ஆகவே எந்தவகையான நிறுவன ஆதரவும் இருக்கவில்லை. ஆகவே அவருடைய முயற்சிகள் பெரும்பாலும் நிறைவேறவில்லை.

 

நவீன திரைப்பட தொழில்நுட்பம் வந்தபின்னர் அருண்மொழி குறும்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். சென்னை பிரசாத் ஸ்டுடியோவுடன் இணைந்து திரைத்தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தை நடத்தினார். வெவ்வேறு தருணங்களில் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

 

ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ (1979) திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986இல் ‘காணிநிலம்’ எனும் முழுநீளத் திரைப்படத்தை இயக்கினார். இப்படம், இலண்டன், ஜெர்மனி திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. 1989இல் ‘ஏர்முனை’ எனும் திரைப்படத்தை இயக்கினார். விளைநிலம் சூழியல் ஆகியவற்றைப் பற்றிப் பேசியபடம் அது.

 

அருண்மொழிக்கு அஞ்சலி

 

அருண்மொழி ஒரு பேட்டி  அந்திமழை

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58