ஓர் அறைகூவல்

வணக்கம்.

நான் கிருஷ்ணமூர்த்தி. கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இத்துடன் நான் எழுதியுள்ள புத்தகங்களை இணைத்துள்ளேன். இப்புத்தகங்கள் இன்னும் எந்தப் பதிப்பகத்தின் சார்பாகவும் வெளியிடப்படவில்லை. இவற்றை எனது இணைய தளம் Thamizhkrishna.com வழியாகவும் தரவிறக்கிக் கொள்ளலாம். புத்தகம் எழுதியுள்ளதன் நோக்கம் மனிதகுலத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதே. புத்தகங்களின் கருத்துக்கள் அனைத்திற்கும் நானே பொறுப்பு. இவற்றின் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

கிருஷ்ணமூர்த்தி

***

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி

உங்கள் நூலை வாசித்தேன். நீங்கள் எழுதவேண்டிய நூல் தன்னம்பிக்கை நூல்தான் என்னும் எண்ணம உறுதிப்பட்டது. மனிதகுலத்துக்கு மெய்ஞானத்தை இத்தனை சுருக்கமாகவும் எளிமையாகவும் இதற்கு முன் சிலரே வழங்கியிருக்கிறார்கள்

குறிப்பாக 2011 அன்று நீங்கள் எழுதியிருக்கும் ராஜினாமா கடிதம் [http://thamizhkrishna.com/wp-content/uploads/2018/08/edited_arimugam.pdf ] ஒர் அரிய ஆவணம்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49
அடுத்த கட்டுரைஅபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்