அன்புள்ள ஜெ,
உண்மையாகவே இந்தக் குறுங்கதையை வாசித்து பிரமித்துப்போனேன். இது என்ன வகை எழுத்து? பகடி என்றோ நகைச்சுவை என்றோ எழுதியவர் எண்ணுகிறார் என்பது வெளிப்படை. ஆனால் அதெல்லாம் இப்படியா இருக்கும்? முந்தாநாள் ஃபேஸ்புக் எழுதவந்த பையன்கள் எழுதும் பகடி- மீம்ஸ் போல. இல்லை எனக்குத்தான் ஏதாவது பிரச்சினையா?
செல்வக்குமார்
https://www.vikatan.com/arts/literature/anjiraithumbi-3-suguna-diwakars-short-story
***
அன்புள்ள செல்வக்குமார்,
பாவம், நல்ல மனுஷன். ஏதோ முயற்சி செய்கிறார். நகைச்சுவையே இல்லாத திமுகவாக இருப்பதை விட கஷ்டப்பட்டு முயற்சிசெய்யும் திமுகவாக இருப்பது எவ்வளவோ மேல்தானே?
படிப்படியாகத்தான் வந்துசேர்வார்கள். பொறுமை
ஜெ
***