திடீர்னு ஒரு ஒரு சினிமா பட சூட்டிங்க் அதுக்கு நிறைய பிச்சைக்காரங்களும் சாமியாருங்களும் வேணும்னு கேட்டதா எவனோ சொன்னான். அதுவும் சாமியாருங்கள பத்தியும் பிச்சைக்காரங்கள பத்தியும் எடுக்கபோற சினிமான்னு சொன்னாங்க. யாரோ பாலான்னு ஒரு டயரக்டர் பேர சொன்னாங்க. காசும் கிடைக்கும் அப்டியே சூட்டிங்க்ல நடிகருங்களையும் பாக்கலாம்ணு ஜாலியா கிளம்பி போனோம். பாத்தா சூட்டிங் மட்ராசில இல்ல காசியில தான்னுட்டு சொன்னாங்க. எல்லாரையும் ட்ரெயினுல கூட்டிபோவாங்கண்ணு சொன்னாங்க.
அனுபவமா கதையா பீலாவா என்று தெரியாத ஒரு பதிவு சந்தோஷின் இணையதளத்தில்