மும்மொழி கற்றல்
மும்மொழி- கடிதம்
அன்புள்ள ஜெ,
வணக்கம். மும்மொழிக்கொள்கை குறித்த சாய் மகேஷ் அவர்களின் கடிதம் தொடர்பாக சிலவற்றை தெளிவுபடுத்தலாமென எண்ணுகிறேன்.
1. 484 பக்க தேசிய கல்விக்கொள்கை வரைவானது, கல்வியியல் தொடர்பான பல முக்கிய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பாரதி புத்தகாலயத்தின் முயற்சியால் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெரும்பணியை பலரை ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. அவர்களனைவருக்கும் இக்கடிதம்வழி முதல் நன்றி.
https://bookday.co.in/wp-content/uploads/2019/06/NEP-2019-TAMIL-V01.pdf
2. புதிய கல்விக்கொள்கை வரைவு வெளிவருவதற்கு முன்பே இந்தித்திணிப்பிற்கான சமிக்கைகள் வெளிவரத் துவங்கின. ஜனவரியில் புதிய கல்விக்கொள்கை இந்தியைக் கட்டாயமாக்க எந்தப் பிரிவையும் கொண்டிருக்கவில்லை என அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்வந்து மறுப்புத் தெரிவித்தார். http://www.newindianexpress.com/nation/2019/jan/10/no-plans-to-make-hindi-compulsory-javadekar-1923243.html
உண்மை என்னவென்றால், ஜனவரியில் மறுப்புத்தெரிவிக்கும் முன்பே இந்தியைக் கட்டாயமாக்கும் அறிக்கை அவர்முன் டிசம்பர் 15இலேயே சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆதாரமாக, சமர்ப்பித்த குழுவின் கையொப்பமிட்ட பக்கம் அறிக்கையிலேயே உள்ளது. https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/Draft_NEP_2019_EN_Revised.pdf
3. “P2.3. Workbooks on language and mathematics: Every child in Grades 1-5 will have a workbook for languages and mathematics in addition to the school textbook. This will ensure that grade-appropriate, creative, and engaging practice opportunities are available for each child to work at his/her own pace. This would supplement the textbook, build on lessons with a variety of exercises/examples, save teachers’ time, help teachers identify what each child can do and, therefore, help individualise instruction.” அவர் எடுத்துக்காட்டிய பகுதிக்கு மாறாக இந்தப் பிரிவு, ஒன்றாம் வகுப்பிலிருந்தே எழுதப்பயில பயிற்சிப் புத்தகங்கள், கணக்குப் பயிற்சிப்புத்தகங்கள் வழங்கப்படும் என்கிறது. அவர்களுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்க எல்லாப் பெற்றோராலும் இயலுமா? அவர்களுக்கும் மூன்று மொழிகள் தெரிய வேண்டுமே?!
4. எதற்கு மூன்று மொழிகள்? வேறெந்த நாட்டிலாவது இதுகுறித்த முன்னுதாரணங்கள் உள்ளனவா?
5. தெரிந்தோ தெரியாமலோ ‘இந்தி நம் தேசிய மொழி’ என்கிற பொய்யை பெரும்பான்மையினர் நம்பத்துவங்கிவிட்டோம். இந்தி தெரிந்தால் அனுகூலம் என்பதும் உண்மையே. இன்றும் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கல்வி, இராணுவத் தேர்வுகளில் இந்திக்கு முன்னுரிமை உள்ளதை நாம் அறிவோம். ஐஐடி தேர்வுகளில் குஜராத்தியை மூன்றாம் மொழியாகப் புகுத்தியதன் பின்னுள்ள அரசியல் நமக்குத் தெரியாமலில்லை. இதெல்லாம் நீதி அல்ல. அதனால், பெரும்பான்மையினர் மூன்றாம் மொழியாக இந்தியைத்தான் தேர்ந்தெடுப்பர். அடிப்படையில், எந்த மொழியை கற்கவேண்டுமென்பதை அரசு முடிவெடுக்கக் கூடாது. அதன்முலம் நம் அரசியல் அதிகாரம் பறிக்கப்படும். இந்திய ஒன்றியத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ன உரிமைகளை அனுபவிக்கிறாரோ, அதே உரிமையை இந்தி பேசாத ஒருவரும் தன் தாய்மொழியைக் கொண்டு அனுபவித்தால்தான் அது சமத்துவம். https://ta.quora.com/inti-moliyaik-kattayamakkinal-tamil-moli-aliyuma/answers/147886132?__nsrc__=4&__snid3__=5320432183
6. போகிற போக்கில் சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அடிப்படை என்றெல்லாம் அடித்துவிடுகிறார்கள். “P4.5.14 Considering the special importance of Sanskrit to the growth and development of Indian languages, and its unique contribution to knowledge development in as well as the cultural unity of the country, facilities for the study of Sanskrit, its scientific nature, and including samplings of diverse ancient and medieval writings in Sanskrit from a diverse set of authors (e.g. the plays of Kalidasa and Bhasa), will be made widely available in schools and higher educational institutions.”
7. இடைநிற்றல் அதிகரித்திருப்பதால் பிரஜ், போஜ்புரி,அவதி, பன்டேல்கந்தி மொழிகளில் அவர்கள் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். சில நாட்களுக்குமுன்பு உத்திரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் பலர் இந்தியிலேயே தோற்றார்கள் என்பதை வாசித்திருப்பீர்கள். அதுவும் ஒரு காரணம். https://www.thehindu.com/education/schools/hindi-school-books-in-uttar-pradesh-now-available-in-braj-bhojpuri-bundelkhandi-and-awadhi/article29397833.ece
8. தமிழகம் போராடியதால்தான் அறிக்கை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை சுருக்கப்பட்ட அறிக்கை என்கிறார்கள். அதாவது 484 பக்கங்களை 80க்கும் குறைவான பக்கங்களில் சுருக்கியிருக்கிறார்கள். சில மொழிகளில் அது 44 பக்கம்தான் இருக்கிறது. https://mhrd.gov.in/relevant-documents
தமிழகத்தில்தான் கல்வி குறித்த விவாதத்திலும் போராட்டத்திலும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்தின் தலைநகரில் ஒரு கூட்டம் நடந்ததாகவே எனக்குத் தெரியும். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்.
9. தற்போது, உதவிப்பேராசிரியர் பணிக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. அவர்கள் பின்பற்றப்போகும் தேர்வுமுறை இந்திய ஒன்றியத்தில் எங்கும் இல்லாதது. வேறெந்த மாநிலத்திலாவது இப்படிப்பட்ட அறிக்கை வெளிவந்திருந்தால் போராட்டம் நடத்தியிருப்பார்கள். அதற்கான கவலை நம் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. தமிழகம் வெட்கப்பட வேண்டும்.
10. மும்மொழி குறித்த உங்களின் கட்டுரையும், அதே தினத்தில் வெளிவந்த செல்வேந்திரனின் மொக்கை கட்டுரையும் ஒட்டுமொத்த சமூகத்தையே ‘இவ்வளவு கீழிருக்கிறாய் நீ’ எனக்கூறி முகத்தில் உமிழ்வபை. உங்கள் இருவருக்கும் முத்தங்கள் நூறு.
11. வரைவு குறித்த என்னுடைய சில குறிப்புகள்:
https://sannaloram.blogspot.com/2019/06/blog-post_24.html
https://sannaloram.blogspot.com/2019/06/what-national-education-policy-draft.html
நன்றி.
விஜயகுமார் சாமியப்பன்