மும்மொழி- கடிதம்

மும்மொழி கற்றல்

வணக்கம் ஜெ.,

மும்மொழி கற்றல் (https://www.jeyamohan.in/122793#.XYetqmZS82w)கட்டுரை வாசித்தேன்.
வரைவு தேசிய கல்விக்கொள்கை 2019, படித்துப் பார்க்கப்படாமலேயே அனைத்துத் தரப்பினராலும் விமர்சனம் செய்யப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானது.
தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் இப்படி நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை.

  • வரைவு வெளியிடப்பட்ட இரண்டொரு நாட்குளுக்குள்ளாகவே, மூன்றாவது மொழியாக ஹிந்தி என்பது விலக்கிக்கொள்ளப்பட்டு ஏதாவது ஒரு இந்திய மொழி எனத் திருத்தி வெளியிடப்பட்டது.
  • குறிப்பாக, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் ஒன்றை ஹிந்தி பேசும் பகுதி மாணவர்கள் படிக்க வேண்டும் என ஆலோசனை சொல்கிறது.
  • ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பிற பிராந்திய மொழிகளான பிரஜ், மைதிலி, அவதி போன்ற மொழிகளில் பாடப்புத்தகங்கள் வரவேண்டியதின் அவசியம் பற்றிச் சொல்கிறது.
  • ஹிந்திப் பகுதியினர் சமஸ்கிருதத்தையே மூன்றாம் மொழியாகப் படித்தால், உயர் நிலைக் கல்வியின் போது செம்மொழிகளாக விளங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்க பரிந்துரைக்கிறது.
  • மூன்றாவது மொழியை பேசுவதற்கும் பழகுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கச் சொல்கிறது – எழுதப் படிக்க அல்ல.
  • தேவைப் பட்டால் மூன்றாவது மொழியை 6-ஆம் அல்லது 7-ஆம் வகுப்பில் மாற்றிக்கொள்ள நெகிழ்ச்சித்தன்மையை கொடுக்கிறது.
  • பண்டைய மற்றும் தற்காலம் வரையிலான இந்திய இலக்கியங்கள் அவரவர் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு பரவாலாக பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத்தர் பரிந்துரைக்கிறது.
  • இந்திய மொழிகளில் இசையும் நாடகமும் பயிற்றுவிக்கச் சொல்கிறது.
  • மூன்று மொழிகளுக்கு அப்பால், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜப்பானிய போன்ற வெளி நாட்டு மொழிகள் பயில வாய்ப்பளிக்க வேண்டும் என்கிறது.

இவை எல்லாம் லட்சியங்கள். இவற்றை அடைய இலக்கு 2035 எனப் பொதுவாக சொல்லப்படுகிறது.
முக்கியமாக 1968 இல் இருந்து இருக்கும் அதே மும்மொழித் திட்டத்தின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் தான் இது என்கிறது.

குழந்தைகள் மொழியை எளிதாகக் கற்பார்கள், ஆனால் எழுதிப் பழகுவது கொடுமை என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.  கல்விக்கொள்கையில் அதற்கான விளக்கம் உள்ளது.  நான்காம் வகுப்பு முதல் தான் அவர்கள் மூன்றாவது மொழியை எழுதப் பயில்வார்கள் என்கிறது.
P4.5.3. Exposure to three or more languages in schools: To leverage the enhanced language-learning abilities of young children, all students from pre-school and Grade 1 onwards will be exposed to three or more languages with the aim of developing speaking proficiency and interaction, and the ability to recognise scripts and read basic text, in all three languages by Grade 3. In terms of writing, students will begin writing primarily in the medium of instruction until Grade 3, after which writing with additional scripts will also be introduced gradually.

ஆங்கிலத்தை ஒரு மாற்றுக் குறைத்து மதிப்பிடுவது இந்தக் கல்விக்கொள்கையில் ஒரு உறுத்தலாக சிலருக்கு இருக்கக்கூடும். அதிலும் கூட, அறிவியலை மேல்வகுப்பில் எடுத்துப் படிப்பவர்களுக்கு ஆங்கில வழியில் படிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி ஏற்றுக்கொள்கிறது.  எந்த வழியில் படித்தாலும் தாங்கள் கற்றதை தங்கள் சொந்த மொழியில் வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகிறது.

நேரம் கிடைக்கும் போது முழுமையாகப் படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதினால் மகிழ்வேன். 7-8 பக்கங்கள்தான்.

குறிப்பிட்ட அத்தியாயத்தை என்னுடைய வலைப்பூவில் பதிவேற்றி உள்ளேன். தமிழில் இந்த அத்தியாயம் மற்றும் 2 அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.

https://thinkingalound.blogspot.com/2019/09/45-education-in-local-language-mother.html

நன்றி,
சாய் மகேஷ்.

நமது கல்வி -கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-14
அடுத்த கட்டுரைஅமேஸான் – கடிதம்