இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத்(விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது.