என்னுடைய இருபதாண்டுக்கால நண்பரான நிர்மால்யா [மணி, ஊட்டி] இவ்வருடத்திற்கான கேந்திர சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருதை பெற்றிருக்கிறார். நிர்மால்யா மலையாளத்தில் இருந்து பல ஆண்டுகளாக தமிழுக்கு தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்து வருகிறார். எம்.டி.வாசுதேவன்நாயரின் திரைக்கதைகள், மாதவிக்குட்டி [கமலா தாஸ்] எழுதிய ‘சந்தனமரங்கள்’[சிறுகதைகள்] கோவிலனின் தட்டகம் [நாவல்] சாறாஜோசஃப் எழுதிய ’அலாஹாவின் பெண்மக்கள்’ [நாவல்] காக்கநாடனின் யாழ்ப்பாணாப்புகையிலை[ சிறுகதைகள்] போன்றவை அவரது முக்கியமான நூல்கள்.
உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அக்காதமி விருது கிடைத்துள்ளது, நிர்மால்யாவுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்