கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் சம்பத்குமார் கஜகிஸ்தானில் பனி புரிந்து வருகிறேன். தங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பியிருந்தேன். தங்களின் கதைகள் ஏதோ செய்கின்றன. உண்மைகள் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. தங்களின் எழுத்துக்களில் ஒரு தாக்கம் இருக்கிறது. நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன் ஆனாலும் என்னால் அந்தப்பகுதி வழக்கங்களை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சம்பத்.

அன்புள்ள சம்பத்குமார்

கஜகிஸ்தானில் இருந்து பலர் இணையதளத்தை வாசிக்கிறார்கள் என்று அரங்கா சொன்னபோது நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்.

இலக்கியத்தில் உள்ள யாதும் ஊரே, யாவரும் கேளிர்

ஜெ

முந்தைய கட்டுரைபெருவலி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரங்களின் மைந்தர்கள்