இந்தியன்- 2,கதை

Shankar-Kamal Haasan’s Indian 2 story leaked?

ஒருநாளில் நூறு அழைப்புக்கள். மின்னஞ்சல்கள். பதற்றமான குறுஞ்செய்திகள். தொலைபேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருக்கவேண்டியிருந்தது. ஆகவே என்னை அழைத்தவர்கள் பலரை நானே பின்னர் கூப்பிட்டுப் பேசநேர்ந்தது. விஷயம் ஒன்றே. இந்தியன்-2 கதை வெளியாகிவிட்டதாமே? உண்மையா?

 

நம்மவரின் பதற்றத்திற்கு இதைவிடப் பெரிய காரணம் தேவையில்லை. பல்வேறு இணைப்புக்களை அளித்திருந்தார்கள். சரி, கதை அதுவே என்றாலும் என்ன? சினிமாக்கதைகளுக்கு, குறிப்பாக சாகசக் கதைகளுக்கு, உலகமெங்கும் ஒரு சில அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் உண்டு. அவற்றை மீறமுடியாது. உண்மையில் கதை என்ன என்பது அல்ல, அதை எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் படத்தைத் தீர்மானிக்கிறது.

 

இருந்தாலும் சொல்லியாகவேண்டும். இந்த இணையதளங்களில் வெளிவந்திருப்பது இந்தியன்-2 கதை அல்ல. படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அங்கே நடிகர்களின் வேடம், படம்பிடிக்கப்படும் ஒரு சில காட்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக்கதையை உருட்டியிருக்கிறார்கள். சினிமா தொடர்பான ஊகங்கள் தமிழகத்தின் கேளிக்கைகளில் ஒன்று. இதுவும் அவ்வாறே. மற்றபடி கதை முற்றிலும் வேறு. ஏழெட்டு ஊகங்களைப் பார்த்தேன். எல்லாமே சுவாரசியமானவை. ஆனால் எவையுமே இந்தியன்2 கதை அல்ல

 

ஆகவே நண்பர்கள் அமைதியடையலாம், என் மின்னஞ்சலுக்கு எழுதவேண்டாம்.

முந்தைய கட்டுரைஅபி கவிதைகள் நூல்
அடுத்த கட்டுரைபக்தி இலக்கியம் – கடிதங்கள்