பாலா ஒரு சிறந்த டைரக்டர். இழப்பு என்ற புள்ளியிலிருந்து படைப்புகளை உருவாக்குபவர் அவர். காதலை இழந்ததன் கதைதான் சேது. தாய்ப்பாசத்தை இழந்ததன் கதைதான் நந்தா. நட்பை இழந்ததன் கதைதான் பிதமகன். தன்னை இழந்ததன் கதைதான் நான் கடவுளா? உங்கள் கட்டுரை வழியெ புரிந்தது அதுதான்.. நான் கடவுள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
கடலூர் சீனு
**
அன்புள்ள மகிழவன்
கம்பன் காலத்தில் பலவகையான கருவிகள் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. கம்பன் சொல்வது செக்குபோன்ற மர இயந்திரங்களையாக இருக்கலாம். விலங்குகளை வைத்தும் காற்றையும் நீரையும் வைத்தும் அவை இயக்கப்பட்டிருக்கலாம். சங்க காலத்தில் ஆயுதங்களிலேயே கைவிடு படை என்ற ஒன்று இருந்துள்ளது– அவை இயந்திரங்களே
ராமாயண காலம் என்றால் எந்தக்கால்ம் என்று சொல்ல முடிவதில்லை. கிமுவில் என்ன இயந்திரம் இருந்தது என்றும் ஊகிக்க முடிவதில்லை. ஆனால் தொன்மையான உதயனன் கதை முதலிய நூல்களிலேயே பயன்பாட்டு இயந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மகாபாரதத்தில் பல இயந்திரங்கள் சொல்லப்படிருக்கின்றன. பீமனைக் கொல்ல பயிற்சி எடுக்கும்பொருட்டு துரியோதனன் ஒரு இயந்திரப்பாவையை செய்ததாக ஒரு இடத்தில் வருகிறது
இயந்திரங்கள் — இயந்திரங்கள் பற்றிய கருதுகோள்கள் முற்காலத்திலேயே இருந்துள்ளன.
கரும்பு தொன்மையான காலகட்டத்திலேயே இங்கே பயிர்டப்பட்டிருந்தது.வெல்லம் எப்போதுமே பயன்பாட்டில் இருந்தது
ஜெ
**
அன்புள்ள ஜெயமோகனுக்கு
பல நாட்களாகவே போரும் அமைதியும் நாவலைப் படிக்க ஆவலாக உள்ளேன்…
ஆனால் எனக்குப் பொதுவாக மொழிபெயர்ப்புகளின் மேல் ஒரு தீராத அவ நம்பிக்கை உள்ளது.
இந்த நாவலின் உங்களைக் கவர்ந்த மொழிபெயர்ப்பை சொல்ல முடியுமா? (ஆங்கில/தமிழ்)
இதுபோல் உங்களைக் கவர்ந்த பிற மொழிபெயர்ப்புகளின் பட்டியலையும் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
நன்றி
ரத்தன்
அன்புள்ள ரத்தன்
டி.எஸ்.சொக்கலிங்கம் மொழியாக்கத்தில் 1950களில் வெளிவந்த போரும் வாழ்வும் என்ற முழுமையான மொழிபெயர்ப்பு அதன் சரளத்தன்மைக்காகவும் துல்லியத்துக்காகவும் புகழ்பெற்றது. நீண்ட இடைவேளைக்குப்பின்னர் இப்போது மறு பதிப்பாக போரும் அமைதியும் என்றபேரில் வெளிவந்திருக்கிறது. எனி இன்டியன் பதிப்பகத்தின் இணையதளத்திலேயே தேடலாம்.
http://www.anyindian.com/product_info.php?products_id=155004
ஆங்கிலத்தில் சிக்னெட் கிளாசிக்ஸ் மொழியாக்கம் சிறந்தது என்பது என் எண்ணம். ஆனால் சோவியத் பதிப்பான ராடுகா பதிப்பக மொழியாக்கமே துல்லியமானது என சிலர் சொல்கிறார்கள்
88
கிருஷ்ணகிரி:ஒருகடிதம் இம்மாதிரி பல பெயர்களை மாற்றுவது உலகளாவிய செயல் என்றே நினைக்கிறேன், நிற்க.
நான் இட்ட இப்பதிவை பாருங்கள். திடீரென ஒரு நாள் தெருப்பெயர்களிலிருந்து சாதி அடையாளங்களை எடுத்தனர். வெங்கடாசல செட்டித் தெரு, வெங்கடாசல முதலித் தெரு மற்றும் வெங்கடாசல நாயக்கன் தெரு எல்லாமே ஒரு நாள் இரவு வெங்கடாசல தெருவாக மாற்றப்பட்டன. இவை மூன்றுமே திருவல்லிக்கேணியில் இருப்பவை. இதனால் பல குழப்பங்கள் விளைந்தன. எனது பதிவின் நோக்கமே யார் சாதிப் பெயரை யார் எடுப்பது என்றுதான். பார்க்க: http://dondu.blogspot.com/2007/01/blog-post_30.html
அவ்வாறு செய்வதிலும் முழு நேர்மை இல்லை. தி. நகரில் இன்னும் நாயர் ரோட் இருக்கிறது, நந்தனம் சிக்னலிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை பிரிகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்