பைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’

ஒரு நியூஃபௌண்ட்லாண்ட் நாயின் கல்லறை வாசகம்

புகழினால் அறியப்படாத, பிறப்பினால் புகழப்பட்ட
ஒரு மேல்குடிமகன் மண்மறையும்போது
சிற்பியின் கலைத்திறன் பெருந்துயரை பறைசாற்றுகிறது.
கல்லறை வாசகங்கள் உள்ளே துயில்பவனை அறிவிக்கின்றன
அனைத்துக்கும் பின் தெரிவது அவன் யாரென்று அல்ல,
யாராக இருந்திருக்கவேண்டும் என்றுதான்

ஆனால் எளிய நாய், வாழ்க்கையில் உறுதியான நண்பன்,
வரவேற்பதில் முதல்வன், காப்பதில் முன்னணியினன்,
அவன் நேர்மையான நெஞ்சம் என்றும் உரிமையானக்குச்சொந்தம்.
அவன் உழைப்பதும் போராடுவதும் உண்பதும் உயிர்ப்பதும் அவனுக்காகவே.
கௌரவிக்கப்படாமல் வீழ்கிறான், கவனிக்கப்படாமல் மறைகிறான்.
மண்ணில் அவனுக்கிருந்த ஆத்மா விண்ணில் மறுக்கப்படுகிறது.

மனிதனோ வீண் கிருமி! செய்வதெல்லாம் மன்னிக்கப்படுமென நினைக்கிறான்
தன்னுடைய ஆத்மா அம்ட்டுமே விண்ணுக்கு செல்லுமென நம்புகிறான்.

ஓ மனிதா ! இம்மண்ணில் வந்து சற்றே தங்கிச்செல்பவன் நீ
மிடிமையால் இழிவடைந்தவன், அதிகாரத்தால் சீரழிந்தவன்!
உன்னை அறிந்தவர் அருவருத்து விலகுவர்.
உயிர்கொண்ட புழுதியின் தரம்கெட்ட குவியல் நீ.
உனது அன்பு வெறும் ஆசை. உனது நட்போ ஏமாற்று.
உனது புன்னகை போலி . உனது சொற்களோ மோசடி.
இயற்கையிலேயே கீழ்மையானவன் பெயரால் மட்டுமே உயர்ந்தவன்.
உன் சொந்தங்களாகிய ஒவ்வொரு மிருகமும் உன்னை வெட்கத்தால் கூசிச்சிவக்கச் செய்யும்1

தற்செயலாக இந்த எளிய கலத்தை வாங்கிக் கொண்டவனே
அதை கைமாற்று. இது நீ துயரம் கொள்ள விரும்பும் எவரையும் கொண்டிருக்கவில்லை.
ஒரு நண்பனின் மிச்சங்களை அடையாளம் செய்ய எழுந்துள்ளன இந்த நடுகற்கள்
வேறொன்றுமில்லை. ஆம் இதோ அவன் கிடக்கிறான்.

Inscription on the Monument of a Newfoundland Dog, 1808

When some proud son of man returns to
earth,
Unknown to glory, but upheld by birth,
The sculptor’s art exhausts the pomp of
woe,
And storied urns record who rest below:
When all is done, upon the tomb is seen,
Not what he was, but what he should have
been:
But the poor dog, in life the firmest friend,
The first ot welcome, foremost to defend,
Whose honest heart is still his master’s
own,
Who labors, fights, lives, breathes for him
alone,
Unhonored falls, unnoticed all his worth,
Denied in heaven the soul he held on
earth:
While man, vain insect! hopes to be for-
given,
And claims himself a sole exclusive heaven.
Oh man! thou feeble tenant of an hour,
Debased by slavery, or corrupt by power,
Who knows thee well must quit thee with
disgust,
Degraded mass of animated dust!
Thy love is lust, thy friendship is all a cheat,
Thy smiles hypocrisy, thy words deceit!
By nature vile, ennobled but by name,
Each kindred brute might bid thee blush
for shame.
Ye! who perchance behold this simple urn,
Pass on – it honors none you wish to mourn:
To mark a friend’s remains these stones
arise;
I never knew but one, – and here he lies.

முந்தைய கட்டுரைடாக்டர் கே
அடுத்த கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 1