அஞ்சலி : ஆற்றூர் ரவிவர்மா

ஆற்றூர் ரவிவர்மா

மலையாளக் கவிஞரும் என் முதல் ஆசிரியருமான ஆற்றூர் ரவிவர்மா அவர்கள் இன்று மாலை காலமானார்.

மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம் அவருக்கு தொண்ணூறாம் பிறந்தநாள் வந்திருக்கும். சென்ற சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார்.

இன்று காலை முதலே மனம் நிலையிழந்திருந்தது. எதுவும் எழுதவில்லை. நண்பர்களை அழைத்து என்ன என்று அறியாமலேயே கடுமையான உளச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது இச்செய்தி வந்திருக்கிறது

என் அறியாப்பருவத்தில் ஆட்கொண்டவர். அன்றைய அலைக்கழிப்புக்கள் அனைத்துக்கும் தாங்காக நின்றவர்.அனைத்துக்கும் மேலாக அந்த வயதில் சென்று படியநேரும் கருத்தியல் அகழிகளிலிருந்தெல்லாம் வழிதிருப்பி கலையையே ஆன்மிகம் என என் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்.

தமிலும் மலையாளத்திலும் என் முதல்நூல்களை முதல் ஆசிரியனுக்கும் அவர் துணைவிக்கும்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். என்றும் அவர் அடிபணிந்து ஒரு கணமேனும் நினைக்காமல் இருந்ததில்லை.

நான் நுழைகையில் ”‘ஆ” என ஓர் ஒலியெழுப்புவார் ஆற்றூர். பின்னர் ஒரு சிரிப்பு. ஆற்றூரின் அச்சிரிப்பு என்னை எத்தனை ஆண்டுகள் மந்திரம் போல தொடர்ந்து வந்திருக்கிறது

ஆசிரியனுக்கு அஞ்சலி.

 

ஆற்றூர்

ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்

 

 

 

ஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்

 

முந்தைய கட்டுரைகற்காலத்து மழை -1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27