அன்புள்ள சார்,
எழுத்தாளர் விலாஸ்சாரங் எழுதிய ஆங்கில நாவலான “The Dhamma man” நாவலை ‘ தம்மம் தந்தவன்’ என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். ‘நற்றிணை’ பதிப்பித்துள்ள இந்நாவல் சென்ற சனிக்கிழமையன்று வெளியானது. இது புத்தரின் வாழ்க்கையைப் பற்றியது. நீங்கள் பயணத்தில் இருந்ததால் அந்தச்சமயத்தில் அழைக்கவில்லை. வீட்டிற்கு ஒரு புத்தகத்தை கொரியர் அனுப்பியிருந்தேன். இது மொழி பெயர்ப்பு அனுபவம் குறித்த எனது பதிவு :-
மொழி பெயர்ப்பு அனுபவம்– தம்மம் தந்தவன்
புத்தரைச் செலுத்திய விசை- தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரை
புத்தகம் நற்றிணை இணையதளத்திலும், புத்தக நிலையங்களிலும்
புத்தக கண்காட்சிகளிலும் கிடைக்கும்.
அன்புடன்
R.காளிப்ரஸாத்