எழுதுபொருளும் எழுத்தும்

மாயாவிலாசம்!
எழுதும் முறை – கடிதங்கள்
செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மாயா விலாசம் கட்டுரையும் தொடர்ந்து வரும் எழுதும் முறை கடிதங்களும் சுவாரசியமாக உள்ளன.

பல வருடங்களுக்கு முன் படித்த ஒரு கட்டுரையிலிருந்து சில வரிகள்:

Sometime in 1882, Friedrich Nietzsche bought a typewriter—a Malling-Hansen Writing Ball, to be precise. His vision was failing, and keeping his eyes focused on a page had become exhausting and painful, often bringing on crushing headaches. He had been forced to curtail his writing, and he feared that he would soon have to give it up. The typewriter rescued him, at least for a time. Once he had mastered touch-typing, he was able to write with his eyes closed, using only the tips of his fingers. Words could once again flow from his mind to the page.

But the machine had a subtler effect on his work. One of Nietzsche’s friends, a composer, noticed a change in the style of his writing. His already terse prose had become even tighter, more telegraphic. “Perhaps you will through this instrument even take to a new idiom,” the friend wrote in a letter, noting that, in his own work, his “‘thoughts’ in music and language often depend on the quality of pen and paper.”

“You are right,” Nietzsche replied, “our writing equipment takes part in the forming of our thoughts.” Under the sway of the machine, writes the German media scholar Friedrich A. Kittler , Nietzsche’s prose “changed from arguments to aphorisms, from thoughts to puns, from rhetoric to telegram style.”

– வைகுண்டம்

மதுரை

அன்புள்ள ஜெ

எழுதும் முறை பற்றிய கட்டுரை வாசித்தேன். இன்று எழுதும் கருவிகள் மாறியிருப்பதனால் இரண்டு இயல்புகளை நான் கவனிக்கிறேன். ஒன்று, செல்போனில் எழுதுவதனால் நீளமான சொற்றொடர்கள் இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. உதிரிச்சொற்களால் ஆன சொற்றொடர்களும் முறிந்த சொற்றொடர்களும் நிறையவே வருகின்றன. நீளமாக எழுதிக்கொண்டே போக பேனா உதவியது. இன்றைக்கு செல்போனில் அப்படி எழுதமுடியவில்லை. அதேபோல தட்டச்சிட கஷ்டமான சொற்களும் வழக்கொழிந்து வருகின்றன.

இன்னொன்று, பத்திகள் சின்னதாக ஆகின்றன. ஸ்க்ரோல் பண்ணி படிக்க வசதியாக ஒரு கம்ப்யூட்டர் பக்கத்தில் மூன்று பத்திகளாவது தெரியும்படி ஆகியிருக்கின்றன. அச்சுப்புத்தகங்களில் பத்திகள் நீளமாக இருந்தன.

டி.எஸ்.கிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரைஆழிசூழ் உலகு – ராகவேந்திரன்
அடுத்த கட்டுரைஎழுத்தாளனும் சாமானியனும்