கலை வாழ்வுக்காக
அன்புள்ள ஜெ
ஸ்ரீபதியின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் அறிவிப்பில் அதிகபட்ச தொகையை அளிப்பவருக்கு எனது ஓவியம் என்று சொல்லி இருந்தேன். பலர் தங்களால் இயன்ற தொகையை திருமதி. சரிதா அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு எனக்கு ரஷீதுகளை அனுப்பி இருந்தார்கள். மொத்தமாக ரூ. 54128க்கான ரஷீதுகள் வந்தன. அதில் அதிக தொகையான ரூ.14000 செலுத்திய பாண்டிச்சேரி வெண்முரசு நண்பர்கள் குழுவுக்கு எனது ஓவியத்தை அளிக்க இருக்கிறேன்.
மற்றபடி நிதி அளித்த அனைவருக்கும் ஸ்ரீபதி பத்மநாபா மொழி பெயர்த்த குஞ்ஞுண்ணி கவிதைகள், எம்.டி.வாசுதேவ நாயரின் பெருந்தஞ்சன் மற்றும் ஸ்ரீபதி எழுதிய மலையாளக் கரையோரம் ஆகிய மூன்று நூல்களை அன்பளிப்பாக வழங்க அந்நூல்களின் பதிப்பாளர் புது எழுத்து மனோன்மணி முன்வந்துள்ளார்.
இழப்பை எவ்வகையிலும் ஈடு செய்யமுடியாது, ஆனால் ஸ்ரீபதியின் குடும்பத்திற்கு நம்மால் செய்ய முடிகிற மீட்சிறு அன்பு மட்டுமே இது. ஒரு கலைஞனாக இது எனக்கு நிறைவளிக்கிறது.
மிக்க நன்றி
அன்புடன்
சந்தோஷ் நாராயணன்.
http://ensanthosh.wordpress.com/
***
அன்புள்ள சந்தோஷ்
நம் நண்பர்வட்டத்தில் பலரும் பணம் கட்டியிருக்கிறார்கள் என தெரிவித்தனர். சென்னை, கோவை நண்பர்களும் விரைவில் திரட்டி அனுப்புவார்கள்
ஜெ
***