கலை வாழ்வுக்காக

சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்மநாபா, கோவையில் வாழ்ந்துகொண்டு கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி வந்த ஒரு கலைஞன். அவர் மறைவிற்குப்பிறகு நமது சமூகம் அவர்கள் குடும்பத்தை கைவிட்டு விடலாகாது. ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் நிதி திரட்டி வருகிறார்கள்.

“ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார். நன்கு படிக்கும் பெண்ணான பாரதிஅன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி

இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார். இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.” என்று எழுதியிருக்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

ஒரு சக கலைஞனாக ஸ்ரீபதிக்கு செய்யமுடிவது இது தான். தெருக்கூத்து மற்றும் கதகளி முகங்களை இணைத்து இதற்காகவே இந்த அக்ரிலிக் ஓவியத்தை நேற்று வரைந்தேன். கலை அன்பை, இணக்கத்தை, அரவணைப்பை சொல்லும் வழி.

ஸ்ரீபதி அவர்களின் மனைவி சரிதா இப்போது கேரளாவில் இருக்கிறார். அவருடைய வங்கி எண்ணை கீழே கொடுத்திருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் அந்த வங்கி எண்ணிற்கு உங்கள் நிதிபங்களிப்பை அனுப்புங்கள். பணம் அனுப்பியதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையோ அல்லது மெசேஜையோ எனது 98402 59414 நம்பருக்கு உங்கள் பெயர் விவரத்துடன் whatsappஇல் அனுப்புங்கள். இன்றிலிருந்து அடுத்த புதன் கிழமை (03-07-19) இரவிற்குள் யார் அதிகபட்ச தொகையை அனுப்பியிருக்கிறார்களோ அவருக்கு இந்த அக்ரிலிக் ஓவியத்தை நான் எனது அன்பின் நினைவாக வழங்குவேன். (மற்றவர்களுக்கு என் மனதின் ஆழத்திலிருந்து நன்றி) அடுத்த வியாழன் அதன் விவரங்களை அறிவிக்கிறேன். ஓவியத்தை சென்னையில் என்னிடமிருந்து நேரடியாக நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ பெற்றுக்கொள்ளலாம். (டேமேஜ் ஆக வாய்ப்புள்ளதால் கொரியரோ பார்சலோ அனுப்ப இயலாது) Acrylic on Canvas board, Size 16×20 inches.

சரிதா அவர்களின் வங்கி எண்.

MRS SARITHA

AC NO 12530100122961
MICR Code 689049003
IFSC FDRL0001253

THE FEDERAL BANK Ltd
KAVUMBHAGOM Branch
KERALA 689102

அன்புடன்
சந்தோஷ் நாராயணன்

http://ensanthosh.wordpress.com/

***

முந்தைய கட்டுரைஅறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -4