’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை
திரையில் இயற்கையாக அமையும் புன்னகை முகம் மிக அரிது எனவும் நமது நடிகர் நடிகைகளில் அதுபோன்று இயற்கையாக புன்னகைப்பவர்கள் வெகு சிலரே என்றும் நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தீர்கள்.
ஆர்வமிகுதியில் நான் அது முதற்கொண்டே புன்னகை முகங்களை தேடத் துவங்கி விட்டேன்.
முதலில் “சாத் சாத்” படத்தில் வரும் தீப்தி நாவல் நான் இதுவரை பார்த்ததிலேயே மிக இயற்கையாக புன்னகைக்கிறார். இந்த பாடலை சுமார் நான் 20 முறைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்.
அடுத்தது ஒரு சமூகவியல் ஆய்வின் காட்சித் தொகுப்பு. அழகாக இருக்கிறீர்கள் எனக் கூறிய பின் அவர்களின் புன்னகை முகங்கள்.
“அருகர்களின் பாதையில்” நாம் அஜந்தா குகைகளுக்கு சென்றிருந்தபோது 2 வடகிழக்கு இளம் பெண்களின் சுதந்திரப் புன்னகையும் தனி பயணிகளான அவர்களின் அந்த விடுதலை உணர்வும் நான் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள்.
மகிழ்ச்சி எப்பொழுதும் எளிதில் பரவக்கூடியது தான், நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே, மகிழ்ச்சியாக இருப்பவர்களை பார்ப்பது தான் அது.
கிருஷ்ணன்
***
அன்புள்ள கிருஷ்ணன்,
இன்று தீயின் எடை நாவலின் மூன்றாவது அத்தியாயத்தில் புன்னகை பற்றிய ஒரு பகுதியை எழுதினேன். உதட்டில் விழிகளில் இல்லாமல் முகத்தில் எப்படி புன்னகை திகழமுடியும் என்று. அதை நினைவூட்டிய பாடல் இது
ஜெ