அன்புள்ள ஜெ
நகைச்சுவை என்பது அரிதாகவும் அபத்தமாகவும் ஆகிவிட்ட
சூழலில் மிகச் சிறந்த அங்கதக் கதை ‘நாலாவது கொலை’
சிரித்துச் சிரித்து ஐந்தாவது கொலை விழுந்திடப் போகிறது.
ஒரு நூற்றாண்டுத் தமிழ் வாசிப்பின் சாரமாகவும் இருக்கிறது
உந்தன் நாயர் குலத்துதித்த-நைசா கிருஷ்ணரை நாயர்
ஆக்கிட்டிங்கீளே! நான் கிருஷ்ணன் நாயக்கர் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்
“நாயகனாய் நின்ற நந்த கோபனுடய கோவில் காப்பானே!”
என்று திருப்பாவை கூறுகிறதே!
அன்புடன்
ராமானுஜம்.
**********
பிரபல எழுத்தாளர் இணையதளம் முடக்கம்
பாகிஸ்தான் சதியே காரணம்-சிதம்பரம் பதவி விலக வேண்டும் !!-அத்வானி அறிக்கை
மைனாரிட்டி தி.மு.க அரசின் கையாலாகாதத்தனத்தின் வெளிப்பாடு!!பாதிக்கப் பட்ட எழுத்தாளருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி!!-ஜெ
உடன் பிறப்பே!! என் எழுத்தை இலக்கியம் இல்லை என்றவரின் இணையதளத்தை இன்று கண்டு நீ இறும்பூது எய்துவது என் மனக்கண்ணில் தெரிகிறது-மு.க
இவரும் டெலி காம் டிபாட்ர்மெண்ட்ல ஒர்க் பண்ணிருக்கார்.ராசாக்கும் இவருக்கும் ஒரு லின்க் இருக்கு!!அதான் அவரைக் கைது செஞ்சோன்ன இவர் வெப்ஸைட்ல பிராப்ளம்!இதுக்கு ஒரு கேஸ் போடப் போறேன் -சு.சுவாமி
செய மோகனின் சுய விளம்பரத்தைப் பாரீர்!!- வசவு இணையதளம்
இதுக்குத் தான் ஜேம்ஸ் பாண்ட்,ஷ்ர்லக் ஹோம்ஸுன்னு வெளிநாட்டுக் காரங்களை அளவுக்கு அதிகமா புழங்கவிடக் கூடாதுங்கறது-வாசகர்கள்
அன்புடன்
ராமானுஜம்
8888888888888888
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது நான்காவது கொலை மிக அற்புதமாய் புனையப்பட்டுள்ளது. Douglas Adams போன்ற எழுத்து வடிவமும் carefree attitude-ம் தமிழில் படிப்பதற்க்கான வாய்ப்பு இல்லையே என்ற என் நெடுநாள் ஏக்கம் தீர்த்ததற்கு மிக்க நன்றி.
சத்யா