அன்புள்ள ஜெ,
நான் பெங்களூரில் வசிக்கிறேன். இங்கு ஏதேனும் வாசகர் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன். தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. ஏதேனும் வாசக நண்பர்கள் வட்ட தொடர்பு பெங்களூரில் கிடைத்தால் என்னுடைய நள்ளூள் அது. இணக்கமான வாசகர்கள் உடன் தொடர்பில் இருப்பது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.
நீங்கள் என்னுடைய இந்த பதிவை உங்களுடைய வலைப்பதிவில் பதிவிட்டால் என்னுடைய அலைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
நினேஷ் குமார்
பெங்களூர்
96772 60531.
***
அன்புள்ள நினேஷ்குமார்,
நானறிந்து அவ்வாறு தொடர்ச்சியாக நவீன இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் எவையும் பெங்களூரில் நடப்பதில்லை. என் பெங்களூர் நண்பர்கள் அனைவரும் ஈரோட்டிலும் கோவையிலும் நிகழும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத்தான் கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்கள்
வாசகசாலை என்னும் அமைப்பு பல ஊர்களில் இலக்கியச் சந்திப்புக்களை நடத்துகிறது. அவர்கள் பெங்களூரிலும் நடத்துகிறார்கள் என நினைக்கிறேன்.
தமிழகம் முழுக்க நிகழும் இலக்கியச் சந்திப்புக்களை ஒரே தளத்தில் தொகுக்கும் ஒரு முயற்சி நடந்தால் நன்று. ஆனால் தினந்தோறும் வலையேற்றம் செய்யவேண்டும். தொடர்ச்சியாக ற்றைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்
ஜெ