அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்பின் ஜெயன்,

இதுவரை உங்களுக்கு எழுதியதில்லை. இப்பொழுதும் வேறு வார்த்தையின்றி இருக்கிறேன். சோற்றுக் கணக்கை முழுவதுமாக செரித்தப் பின்னரே நான் ஏதேனும் எழுதக் கூடும். முழுக்க மது அருந்தியவனின் துக்கம் போல வெறுமனே வார்த்தைகள் முட்டி மோதுகின்றன.

நிதின்.

அன்புள்ள நிதின்,

நன்றி.

நல்ல கதை உணர்வுகளில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். நெடுநாட்களாக தமிழில் நாம் அதை விட்டுவிட்டோம் . இந்தக்கதைகள் அதை தொடங்கிவைத்தால் நல்லது

உங்கள் மின்னஞ்சல் பெயர் வேடிக்கையாக இருக்கிறது ‘அதுசரி’. இதுவரை இப்படி கேள்விப்பட்டதில்லை..


ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
அறம் மற்றும் சோற்று கணக்கு சிறுகதைகள் வாசித்தேன், எனக்கு பெரிய வாசிப்பு அனுபவம் இல்லை, மேலாண்மை பொன்னுசாமியின் கதைகள் சிலவற்றை சிறுவயதில் வாசித்து நெகிழ்ச்சியாக உணர்ந்து உள்ளேன், பிறகு எஸ்ராவின் கதைகள் சில, உங்கள் கட்டுரைகள் பல படித்திருந்தாலும், சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல் முறை.

அறம் அதன் உச்சங்களில் கண்ணீர் வரவழைத்தது, ஆச்சி கதையில் வருவதற்கு முன் வந்த கண்ணீருக்கும், ஆச்சி கதையில் வந்த பின் வந்த கண்ணீருக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது,
வேறு வேறு மனநிலைகளை நான் உணர்ந்தேன்

சோற்று கணக்கு அதை விட சிறப்பாக இருந்தது, கதை சொல்லியின் உணர்வுகள் கதையில் விரிவாக வருவதால் இன்னும் நெருக்கமாகவும் உணரமுடிகிறது, சாகிப்பின் கையில் இருந்து விழும் சோறும், அறையும் இயலாத மக்களுகானவையாகவே இருக்கிறது, அப்படி பட்ட கைகள் தான் இந்த பூமியைசுழல் செய்கின்றது என்பது என் எண்ணம், பேனா பிடிதிருக்கும் உங்கள் கைகளும் அவ்வகையில் நிச்சயம் சேரும்.

நெகிழ்வான தருணங்களை பலரின் மனதிற்குள் உங்கள் கதை ஏற்படுத்துகிறது, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், எப்படி இவ்வளவு நுணுக்கமாக உரையாடல்களை கிரகித்து பதிவு செய்கிறிர்கள், கதை மாந்தர்கள் நம் அருகில் இருந்து பேசுவது போலவே உள்ளது, ஒருவர் பேசுவதற்கு பதில் யோசித்தாலே, என் காதுகள் அடைத்து மூளை கிரகிப்பதை நிறுத்திவிடுகிறது.

நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது, இலவசமாக இது போன்ற கதைகள் கிடைப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில சமயம் கூச்சமாகவும் உள்ளது.

நன்றி
கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

நன்றி

பொதுவாக கதைகளை நாம் ஒரே வீச்சில் வாழ்க்கையில் இருந்து எடுக்கிறோம். உத்தி வடிவம் மொழி என தனித்தனியாக அல்ல. மேலும் உரையாடல்கள் என்பவை ‘பதிவு’ செயபவை அல்ல. உண்மையில் அப்படி யாரும் பேசுவதில்லை. இவை இலக்கியத்திற்குள் உருவாகக்கூடியவை மட்டுமே. அவை உண்மையானவை போல இருக்கும்படி செய்வதற்கு மட்டுமே அவதானிப்பு தேவையாகிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

நீண்ட நாள் கழித்து நல்ல கதை படித்தேன் தங்களின் சோற்றுக்கடன் மூலம்.கண்களில் தண்ணீர் வந்தது.உங்களின் எழுத்து நடை கண் முன்னே அந்த பெரியவரை நேரில் கொண்டுவந்தது .உயிரோட்டமான நடை.ஹமுக்கே என்று அவர் சொன்னதை வசிக்கும் போது என் முன்னில் அவர் நிற்பதாக உணர்ந்தேன் .கேதேள் சாஹிப் போல் மனிதர்கள் வாழ்ந்தால் உலகம் எல்லோருக்கும் இனிக்கும் .மானுட வாழ்வு சிறக்கும் .வாழ்த்துக்கள் .உங்களின் பணி தொடரட்டும் .

அன்புடன்
அபூபக்கர் ஹாஜாமொஹிதீன்

அன்புள்ள அபூபக்கர்,

நன்றி

எங்கும் எப்போதும் அத்தகைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை சாதாரணமாக நம் கண்களில் படுவதில்லை. காரணம் நாம் அவர்களுக்காக தேடும் கண்களுடன் இருப்பதில்லை. நானே அத்தகைய சிலரை சந்தித்திருக்கிறேன். காசர்கோட்டில் அஷீம் சாகிப் என்ற ஒருவரது கடை இருந்தது. ஒரு ரூபாய்க்கு கஞ்சியும் கிழங்கும் கிடைக்கும். நான் பலநாள் அங்கேதான் சாப்பிட்டிருக்கிறேன். ஒருநாள் கேட்டேன், ஏன் சோறும் மீனுமெல்லாம் சமைக்கலாமே என்று. ‘அதற்கு வேற கடை இருக்கிறதுடா. இது பாவங்களுக்கான கடை’ என்றார்.

உண்மையைச் சொல்லப்போனால் முப்பது வருடம் கழித்து இன்றுதான் அந்தபதிலை நானே உணர்கிறேன். வெறும் ஒரு ரூபாய் மட்டுமே உள்ளவனுக்கும் ஒரு ஓட்டல் தேவைதானே என நினைக்கும் அவரது மனம் புரிகிறது. அந்த ஒரு ரூபாயில் கூட அரைபிளேட் கஞ்சி உண்டு . ஐம்பது பைசாதான். கிட்டத்தட்ட இனாம். முழுக்கஞ்சிக்கும் அரக்கஞ்சிக்கும் என்ன வேறுபாடு என்றால் விலை குறைவு என்பது மட்டுமே

வெவ்வேறு சுயசரிதைகளில் அத்தகைய மனிதர்களைப்பற்றிய சித்திரங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. அவர்களால் மானுடம் வாழ்கிறது

ஜெ

Dear Jeyamohan,
Thanks for your writings.I was quite touched by Aram and Sotru kanaku.Please please write in the same simple style.I find it hard to understand some times.I am afraid you may say that “then dont read”.I have great respect for you . you are a humanitarian (Manithaneyam ullavar).You appear like how Swami Vivekananda amongst Saints.You are a bold ,sincere writer.Your writings are appealing and interesting. I visit your website every day. I fee shame to admit that I like reading vikatan and tamil cinema website which are somehow interesting.It is like an addiction.I will get rid of it.Thanks to vikatan with which I found your website.
It makes me proud to write to a great person.
Best wishes
Dr Parthasarathy

அன்புள்ள நண்பர் ஜெயமோகனுக்கு!
எப்படி இருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் நலம்.
அறம் கதை வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.அண்மையில் நான் வாசித்த சிறுகதையில் இது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

அன்புடன்
டானியல்ஜீவா(கனடா)

Dear Mr. Jeyamohan

I just finished reading your Aram and Sottru kanaku. Aram brought me to tears.

Almost half of sottru kannaku had my mouth watering to some extent (even though it was poignant). I could guess the ending before the finish of this story. My wife keeps asking me why I’m so fond of eating like a small child. I could never answer that question till today. I seem to find an
answer.

I was brought up in a lower middle class agrahram in Triplicane. I was never in poverty at any time but never got tasty food at my young age, I do not know for what reasons ?, may be financial. More so, during the last week of a month. My mother was never allowed to cook by my grandmother. I always longed for hot and spicy food. My neighbour, I used to call her mami, perhaps realized this, used to feed me regularly. Later, we moved out from Triplicane. The mami’s son’s became drunkards and spolit their kidneys and died (a few years after she died), only her daughter lives. Even today, taste of that mani food is in my tongue. She never expected anything from me, nor could I do anything.

Sincerely
Bharath

முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – யுவராஜன்
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு முடிவு-ஒருகடிதம்