இ.பா.வின் ஔரங்கசீப்

இந்திரா பார்த்தசாரதி

Konichiwa Jemo-San,

தங்களுடைய ஜப்பான் பயணம் இனிதாய் செல்கிறது என்று எண்ணுகிறேன். என்னுடைய முதல் சம்பளத்தை அந்நிலத்தில்தான் பெற்றுக்கொண்டேன்.  வாழ்வின்மேல் கொண்டிருந்த பதற்றத்தையும், அவநம்பிக்கையையும் விரட்டியடித்த நிலம். தானியங்கிப் படிக்கட்டுகளில் ஏறக் கற்றுக்கொண்ட காலமது. கிட்டத்தட்ட ஓராயிரம்பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய Self-Service Food Courtல் நமக்கான உணவு தயாரானதை ஒரு சன்னமான பீப் சத்தத்தோடு நமக்குணர்த்தும் கையடக்க கருவிதான், இந்நிலத்தில் நிலவும் ஒழுங்கிற்கு ஒரு சான்று. இவையெல்லாம் 2000த்தின் தொடக்க வருடங்களில்.

இலக்கிய பரிச்சயம் சுத்தமாக இல்லாத காலமது. சுஜாதாவையே அப்போது தாண்டியிருக்கவில்லை. அக்கிஹாபாரா, சிபுயா, கவாசகி, டோக்கியோ என இந்நிலத்தின் தொழில்நுட்ப உச்சங்களைக் கொண்டிருந்த பகுதிகளில் மட்டுமே உடலும் மனமும் திளைத்திருந்தது. அவ்வப்போது காமக்குரா, பௌத்த ஆலயங்கள் என என்னவென்றே புரிந்து கொள்ள முயலாத நிலப்பரப்புகளும் சென்றதுண்டு. தன் சொந்தகாலில் நிற்க ஆரம்பித்த நிலப்பகுதிகளும் மக்களும் நம் நினைவை விட்டு அகலுவதேயில்லை. குறிப்பாக அவர்களின் ‘சுமிமா-சென்’ என்று தலைதாழ்த்தி, இடுப்பை வளைத்து ஒரு மேல்கீழ் செங்கோணம் போலாகி தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது, தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாதவர்களை சீண்டுபவை.

ஐந்து வருட ‘டென்-என்-தோஷி’  இரயில் தடம் அருகமைந்த ஜப்பானிய வாசத்தின் இறுதியில்தான் சுஜாதாவிடமிருந்து, இ.பா.விற்கு முன்னேறியிருந்தேன். அங்கிருந்து உங்களை வந்தடைவதற்கு 10 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் எழுதிய சுவாரஷ்யமான நாடகங்களில் ஒன்றான ‘ஔரங்கசீப்’பை சமீபத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே நமக்குள் ஒரு கற்பனையுலகமாக அமைந்திருக்கும் எழுத்துக்களும் கதாபாத்திரங்களும் நம் கண்முன் இரத்தமும் சதையுமாக எழுந்து, அக்கற்பனையுலகை சீண்டும்போது ஏற்படும் அனுபவங்கள் பரவசமும் அயர்ச்சியும் கலந்த ஒன்றாக அமைகிறது. இந்நாடகத்தைப் பற்றிய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஔரங்கசீப்-வெறுப்பிலெழும் தனிமை

அன்புடன்
முத்து

முந்தைய கட்டுரைரப்பர் -வாசிப்பு
அடுத்த கட்டுரைகாந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா