திருமாவளவன் ஒரு கடிதம்

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்

அன்புள்ள ஜெ,

 

திருமாவளவன் அவர்களை ஆதரிப்பது குறித்து நீங்கள் வெளியிட்ட விளக்கத்தின் இறுதி வரிகள் சற்று சங்கடப் படுத்தின. நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்.  நான் உறுதியான பாஜக ஆதரவாளன்.  இந்தியாவில் தலித்துகளுக்கு இன்று உண்மையில் ஆதவரான கட்சி பாஜக தான் என நம்புகிறேன். பஸ்வான் முதல் கிருஷ்ண சாமி வரை பெரும்பாலான தலித் தலைவர்கள் பாஜக ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். திருமாவளவனும் பாஜக கூட்டணியில் இருப்பதே சரியானது என நினைக்கிறேன். அவர் திக- திமுகவின் வெற்று பொய்ப்பிரசாரங்களை  பரப்புவது   அவருக்கோ அவரது மக்களுக்கோ எவ்வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.  திராவிட சித்தாந்தம் பொய்யையும் அதிகார இச்சையையும் மட்டுமே அடித்தளமாகக் கொண்டது. நேரத்திற்குத் தகுந்தார்ப்போல் மாறிக் கொள்வது. நாளையே பாஜக வென்று மோடி அட்சியமைத்துவிட்டால், ஒரு வாய்ப்பு கிடைக்குமெனில், மோடியை ஆதரிக்க திமுக தயங்காது.

 

பொன்னமராவதி நிகழ்வு குறித்து உண்மையான தகவல் எதுவும் எனக்கு தெரியவில்லை.தலித் மக்கள் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. ஆனால் அந்த நிகழ்வே பாமக விசிக இடையேயான கட்சிமோதல் என்று மட்டுமே கேள்விப்பட்டேன். திட்டமிட்டு அதை சாதிமோதலாக மாற்றியது திமுக என்றும் சொல்லப்பட்டது. எது உண்மை எனத் தெரியவில்லை.

 

ஆனால் அதற்காக திருமாவையும் உங்களையும் வசைபாடுவது கிறுக்குத்தனம். நீங்கள் அளித்த நீண்ட விளக்கத்தை வாசகர்களாகிய எங்களைத் தவிர வேறு எந்த நக்கீரனும் வாசிக்கப்போவதில்லை. வேண்டுமானால் அரைகுறையாக வாசித்து விட்டு மீண்டும் வசைபாடுவார்கள். நீங்கள் யாருக்காக இந்த விளக்கங்களைத் தருகிறீர்கள் என்று தெரியவில்லை.

 

சங்கரன்.

முந்தைய கட்டுரைதுங்கா நதிக்கரை ஓரத்திலே
அடுத்த கட்டுரைஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்