ச. துரை கவிதைகள்

கொடி கட்டப்பட்டது
உப்புகரித்த நாவால் தலைவன்
பாடுகிறான் மீன்களை
முந்தானைக்கொண்ட தலைவி
பெரும் விமோசனங்களை உண்பதற்க்கு
நுண் பாவங்கள் சமைத்தாள்

பிறகு அவளே தன் விழியிழந்த
குழந்தைகளுக்கு மெல்லிய சதைகளை
ஊட்டி முட்களால்
படம் வரைந்து காண்பிக்கிறாள்.

*

ச. துரை கவிதை அரூ இணைய இதழ்
வார்த்தை- ச.துரை கவிதை
ச துரை கவிதைகள் சேரவஞ்சி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்
அடுத்த கட்டுரைஇஸ்லாமும் உபநிடதங்களும்