ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

குமரகுருபரன்

ச.துரை விக்கி

குமரகுருபரன் விக்கி

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை  அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. சமகாலக் கவிதைத்தளத்தில் செயல்படுபவர்களில் பலரை பரிசீலித்தோம். பலரிடம் பரிந்துரை கோரினோம். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் ச.துரையை பரிந்துரை செய்தார். நண்பர்கள் பரிசீலித்தபின் இம்முடிவு எடுக்கப்பட்டது.

குமரகுருபரனின்‍ பிறந்தநாள் ஜூன் 10. ஒரு நாள் முன்னதாக ஜூன் 9 அன்று சென்னையில் விழா நிகழும். நண்பர்கள் அனைவரும் முன்னரே பயணப்பதிவுகள் செய்யவேண்டும் என கோருகிறோம். சென்ற ஆண்டுபோல மதியம் கருத்தரங்கும் மாலையில் விழாவுமாக ஒருங்கிணைக்கலாமா என்பதை  அரங்கம் கிடைத்தபின்னரே முடிவு செய்யவேண்டும்

ச. துரை

குமரகுருபரன் மறைந்தபின் வழங்கப்படும் மூன்றாவது விருது இது. முதல்விருது கவிஞர் சபரிநாதனுக்கும் இரண்டாம் விருது கவிஞர் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. குமரகுருபரனின் நினைவை போற்றும் இந்நாள் இளம்கவிஞர்களுக்குரியதாக ஆகிவிட்டிருப்பதை மகிழ்வுடன் எண்ணிக்கொள்கிறோம். கவிஞனுக்குரிய கொந்தளிப்பும் அமைதியிழப்புமாக வாழ்ந்து குறுகியநாளில் மறைந்த குமரகுருபரன் எங்கள் அனைவருக்கும் அணுக்கமான நண்பராக இருந்தார். எனக்கு இனிய இளவலாகவும். இந்நாளில் அவரை நினைத்துக்கொள்கிறேன்

 

ஜெ

 

 

இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபாவண்ணனுடன் ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34