வல்லினம் இணைய இதழ்

மலேசியாவின் வல்லினம் இதழ் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் இலக்கியமுகத்தை அறிவதற்கு உதவியான முதன்மையான களம் இந்த இணைய இதழ்.

இவ்விதழில் வல்லினம் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றச் சிறுகதைகளின் தொகுப்பு உள்ளது. வல்லினம் வெளியிட்ட நூல்களைப்பற்றிய விமர்சனப்போட்டியில் வென்றஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் பவித்தாரா ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.மலேசிய இலக்கியச் செயல்பாடுகள் தீவிரமானவை, ஒருங்கிணைப்புள்ளவை என்பதற்கான சான்றுகளாக உள்ளன இவை.

கடலூர் சீனு சீ.முத்துசாமியின் மலைக்காடு குறித்து எழுதிய விமர்சனக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.ரிங்கிட் குறுநாவல் குறித்த ஸ்ரீதர் ரங்கராஜனின் விமர்சனம் சுருக்கமானது, தெளிவான அளவுகோல்களுடன் கூர்மையான மொழியில் எழுதப்பட்டது.

இவ்விதழின் முதன்மையான கட்டுரை அ.பாண்டியன் எழுதிய தையும் பொய்யும். பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக மறைமலை அடிகள் ஐநூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துரையாடி அறிவித்தார் என்பதுபோன்ற பொய்கள் இன்று தொடர்ச்சியாக பரப்பப் படுகின்றன. இக்கட்டுரை அதை தரவுகளுடன் ஆராய முற்படுகிறது

மலேசியாவில் நிகழ்ந்த பயிலரங்கில் எழுத்தாளர்கள் இமையம், சு.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிகழவிருக்கும் பயிலரங்கில் சுனீல் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வல்லினம் இணைய இதழ்

முந்தைய கட்டுரைகங்கைக்கான போர் -கடிதம்
அடுத்த கட்டுரைவண்ணநிலவனுக்கு விருது