ம.நவீனுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது
மலேசிய நவீன இலக்கியத்தின் மையவிசையாகச் செயல்படுபவரும், மலேசியச் சிறுகதையாசிரியருமான ம.நவீன் இவ்வாண்டுக்குரிய கனடா இலக்கியத்தோட்டம் விருதைப் பெறுகிறார். நவீன் ’காதல்’ என்னும் சிற்றிதழை முன்பு நடத்தியிருக்கிறார். அதன்பின் பறை என்னும் சிற்றிதழை நடத்தினார். இப்போது வல்லினம் என்னும் இணைய இதழை நடத்துகிறார்.
நவீன் மண்டைஓடி போயாக் ஆகிய சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார் உலகத்தின் நாக்கு என்னும் இலக்கியவிமர்சனத் தொகுதியும் மீண்டுநிலைத்த நிழல்கள் என்னும் இலக்கியநேர்காணல்களின் தொகுதியும் வெளிவந்துள்ளது
வல்லினம் மலேசியாவில் இலக்கியக் கூடுகைகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைக்கிறது. இலக்கியப்போட்டிகளை நடத்துகிறது. மலேசியாவில் நிகழும் நவீன இலக்கியச் செயல்பாடுகளின் முதன்மைஆற்றலாக திரண்டுள்ளது. . ம.நவீனுக்கு வாழ்த்துக்கள்