101 மலையாளத் திரைப்படங்கள்

மாத்ருபூமி நிறுவனம் வெளியிடும் ஸ்டார் ஆண்ட் ஸ்டைல் என்னும் மலையாள சினிமா இதழ் மலையாளத்தில் 1980 முதல் 2019  வரை வெளிவந்த மிகச்சிறந்த 101  மலையாளப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு விமர்சகர்களின் தெரிவுகளில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் இது. இறுதியான தெரிவை விமர்சகர்கள் டாக்டர் என்.பி. சஜீஷ், ஏ.பி.டி.ஆப்ரஹாம், கிரேஸி ஆகியோர் நிகழ்த்தினர்.

விமர்சகர்கள் உருவாக்கிய தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது இப்பட்டியல். வெவ்வேறு அளவுகோல்கள் அவர்களால் கையாளப்பட்டுள்ளன. வணிகப்படம் கலைப்படம் என்னும் பிரிவினை கருத்தில்கொள்ளப்படவில்லை. கேரளப்பண்பாட்டுடனான  தொடர்பு முதன்மையான அளவுகோல். பேசுபொருளின் புதுமையும் ஆழமும், திரைமொழி ஆகியவை பொது அளவீடுகள். கூடவே சுவாரசியம் ஓர் மதிப்பீடாகக் கொள்ளப்பட்டது.

மலையாளப்படங்களைத் தேடித்தேடிப் பார்ப்பவர்களுக்கு இப்பட்டியல் உதவியாக இருக்கக் கூடும்

1 எலிப்பத்தாயம் .  இயக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன்  எழுத்து  அடூர் கோபாலகிருஷ்ணன்

2 பிறவி   இயக்கம் ஷாஜி என் கருண்   எழுத்து   எஸ்.ஜயச்சந்திரன் நாயர்

3 யவனிக   இயக்கம் கே.ஜி.ஜார்ஜ்   எழுத்து  கே ஜி ஜார்ஜ்

4 சிதம்பரம்   இயக்கம் ஜி அரவிந்தன்   எழுத்து  சி.வி.ஸ்ரீராமன்

5 ஒரிடத்தொரு ஃபயல்வான்   இயக்கம் பி பத்மராஜன்   எழுத்து  பி பத்மராஜன்

அடூர் கோபாலகிருஷ்ணன்

6 அம்ம அறியான்   இயக்கம் ஜான் ஆபிரகாம்   எழுத்து  ஜான் ஆபிரகாம்

7 இரகள்   இயக்கம் கே ஜி ஜார்ஜ் எழுத்து கே,ஜி.ஜார்ஜ்

8 பூதக்கண்ணாடி   இயக்கம் ஏ.கே.லோகிததாஸ்   எழுத்து  ஏ.கே.லோகிததாஸ்

9 அனந்தரம்   இயக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன்   எழுத்து  அடூர் கோபாலகிருஷ்ணன்

10 தனியாவர்த்தனம்   இயக்கம் சிபி மலையில்   எழுத்து  ஏ.கே.லோகிததாஸ்

சியாமப்பிரசாத்

11 ஆதாமின்றே வாரியெல்லு   இயக்கம் கே.ஜி.ஜார்ஜ்   எழுத்து  கள்ளியங்காட்டு ராமசந்திரன்

12 ஒழிமுறி   இயக்கம் மதுபால்  எழுத்து ஜெயமோகன்

13 புருஷார்த்தம்   இயக்கம் கே.ஆர் மோகனன்   எழுத்து  கே.ஆர்.மோகனன்

ஜி.அரவிந்தன்

14 பொந்தன்மாட   இயக்கம் டி.வி.சந்திரன்   எழுத்து  டி.வி.சந்திரன்

15 ஒரு வடக்கன் வீரகாத   இயக்கம் ஹரிஹரன்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

16 தெய்வத்தின்றே விக்ருதிகள்   இயக்கம் லெனின் ராஜேந்திரன்   எழுத்து  எம். முகுந்தன்

17 டானி   இயக்கம் டி வி சந்திரன்   எழுத்து  டி வி சந்திரன்

18 ஸி.ஆர்   இயக்கம் சுதேவன்   எழுத்து  சுதேவன்

19 மார்க்கம்   இயக்கம் ராஜீவ் விஜயராகவன்   எழுத்து  அன்வர் அலி, எஸ்.பி.ரமேஷ்

கே ஜி ஜார்ஜ்

20 அக்னிசாட்சி   இயக்கம் சியாமப்பிரசாத்   எழுத்து  லலிதாம்பிகா அந்தர்ஜனம்

21 வாஸ்துஹாரா   இயக்கம் ஜி அரவிந்தன்   எழுத்து  சி.வி.ஸ்ரீராமன்

22 ஒரேதூவல் பக்ஷிகள்   இயக்கம் சிந்த ரவி   எழுத்து  சிந்த ரவி

23 விதேயன்   இயக்கம் அடூர் கோபாலகிருஷ்ணன் – பால் சகரியா

24 வானப்பிரஸ்தம்   இயக்கம் ஷாஜி என் கருண்   எழுத்து  ஷாஜி என் கருண்

25 ஒழிவுதிவஸத்தே களி   இயக்கம் ஸனல்குமார் சசிதரன்- கே.ஆர்.உண்ணி

பரதன்

26 ஈ.ம.ஔ  இயக்கம் லொஜோ ஜோஸ் பல்லிசேரி   எழுத்து  பி.எஃப். மாத்யூஸ்

27 ஞான் ஸ்டீவ் லோபஸ்   இயக்கம் ராஜீவ் ரவி   எழுத்து  சந்தோஷ் எச்சிக்கானம், கீது மோகன்தாஸ்

28 ருக்மிணி   இயக்கம் கே.பி.குமாரன்   எழுத்து  கே.பி.குமாரன்

29 ஆதாமின்றே மகன் அபு   இயக்கம் ஸலீம் அகமது   எழுத்து  ஸலீம் அகமது

30 கிரீடம்   இயக்கம் சிபி மலயில்   எழுத்து  ஏ.கே.லோகிததாஸ்

31 உத்தரம்–   இயக்கம் பி.கே.பவித்ரன்  எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

பி.பத்மராஜன்

32 ஸதயம்   இயக்கம் சிபி மலையில்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

33 உள்ளடக்கம்   இயக்கம் கமல்   எழுத்து  பிபாலசந்திரன்

34 வைசாலி   இயக்கம் பரதன்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

35 அமரம்   இயக்கம் பரதன்  எழுத்து  ஏ கே லோகிததாஸ்

36 ஒற்றால்   இயக்கம் ஜயராஜ்   எழுத்து  ஜோஷி மங்கலத்து

37 வடக்குநோக்கி யந்த்ரம்   இயக்கம் ஸ்ரீனிவாசன்   எழுத்து  ஸ்ரீனிவாசன்

லோகிததாஸ்

38 ஆள்கூட்டத்தில் தனியே   இயக்கம் ஐ.வி.சசி   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

39 ஓர்மக்காய் இயக்கம் பரதன்   எழுத்து  ஜான்பால்

40 நெய்த்துகாரன்   இயக்கம் ப்ரியநந்தனன்   எழுத்து  என்.சசிதரன்

41 ஷட்டர்   இயக்கம் ஜோய் மாத்யூ   எழுத்து  ஜோய் மாத்யூ

42 தாழ்வாரம்   இயக்கம் பரதன்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

43 சுகிர்தம்  இயக்கம்  ஹரிகுமார்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

எம்.டி.வாசுதேவன்நாயர்

44 பாதமுத்ர   இயக்கம் ஆர்.சுகுமாரன் – ஆர்.சுகுமாரன்

45 பஞ்சவடிப்பாலம்   இயக்கம் கே ஜி ஜார்ஜ்   எழுத்து  கே.ஜி.ஜார்ஜ்

46 காழ்ச்ச   இயக்கம் பிளெஸி   எழுத்து  பிளெஸி

47 மணிச்சித்ரத்தாழ்   இயக்கம்  ஃபாஸில் – மது முட்டம்

48 நியூடெல்ஹி   இயக்கம் ஜோஷி   எழுத்து  டெனிஸ் ஜோசஃப்

49 சிந்தாவிஷ்டயாய சியாமளா   இயக்கம் ஸ்ரீனிவாசன்   எழுத்து  ஸ்ரீனிவாசன்

50 காட்ஃபாதர்   இயக்கம் சித்திக் லால்   எழுத்து  சித்திக் லால்

ஐ.வி.சசி

51 மை டியர் குட்டிச்சாத்தன்   இயக்கம் ஜிஜோ புன்னூஸ்   எழுத்து  ரகுநாத் பலேரி

52 ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்   இயக்கம் சித்திக் லால்   எழுத்து  சித்திக் லால்

53 தசரதம்   இயக்கம் சிபி மலயில்   எழுத்து  ஏ.கே.லோகிததாஸ்

54 தூவானத்தும்பிகள் இயக்கம் பி.பத்மராஜன்   எழுத்து பி.பத்மராஜன்

55 நாடோடிக் காற்று இயக்கம் சத்யன் அந்திக்காடு  எழுத்து ஸ்ரீனிவாசன்

56 சந்தேசம்  இயக்கம் சத்யன் அந்திக்காடு  எழுத்து ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்

57 ஞான் கந்தர்வன் இயக்கம் பி.பத்மராஜன்   எழுத்து பி.பத்மராஜன்

58 ஆமேன்   இயக்கம் லிஜோ ஜோஸ் பல்லிச்சேரி   எழுத்து  பி.எஸ்.ரஃபீக்

59 தொண்டிமுதலும் திருக்‌சாக்ஷியும்   இயக்கம் திலீஷ் போத்தன்   எழுத்து  ஸஜீவ் பாழூர்

60 மகேஷின்றே பிரதிகாரம்   இயக்கம் திலீஷ் போத்தன்   எழுத்து  ஷியாம் புஷ்கரன்

61 கும்மாட்டிப்பாடம்   இயக்கம் ராஜீவ் ரவி   எழுத்து  பி.பாலசந்திரன்

62 டிராஃபிக்   இயக்கம் ராஜேஷ் பிள்ளை   எழுத்து  போபி –சஞ்சய்

டி வி சந்திரன்

63 லேகயுடே மரணம் ஒரு பிளாஷ்பேக்   இயக்கம் கே.ஜி.ஜார்ஜ்   எழுத்து   கே.ஜி.ஜார்ஜ்

64 உஸ்தாத் ஹோட்டல்   இயக்கம் அன்வர் ரஷீத்   எழுத்து  அஞ்சலி மேனன்

65 திருஸ்யம்   இயக்கம் ஜித்து ஜோசஃப்   எழுத்து  ஜித்து ஜோசஃப்

66 பிராஞ்சியேட்டன் ஆண்ட் த செயிண்ட் –   இயக்கம் ரஞ்சித்   எழுத்து  ரஞ்சித்

67 சித்ரம்   இயக்கம் பிரியதர்சன்   எழுத்து  பிரியதர்சன்

68 கிளாஸ்மேட்ஸ்   இயக்கம் லால் ஜோஸ்   எழுத்து  ஜேம்ஸ் ஆல்பர்ட்

சிபி மலையில்

69 பெருந்தச்சன்   இயக்கம் அஜயன்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்

70 பரதம்   இயக்கம் சிபி மலயில்   எழுத்து  ஏ.கே.லோகிததாஸ்

71 காக்கோத்திக்காவிலே அப்பூப்பம்தாடிகள்   இயக்கம் கமல்   எழுத்து  ஃபாசில்

72 யாத்ரா   இயக்கம் பாலு மகேந்திரா   எழுத்து  பாலு மகேந்திரா

73 1921 இயக்கம் ஐ.வி.சசி   எழுத்து  டி தாமோதரன்

74 ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு   இயக்கம் கே.மது   எழுத்து  எஸ்.என் சுவாமி

ரஞ்சித்

75 ஈநாடு  இயக்கம் ஐ.வி.சசி  எழுத்து டி.தாமோதரன்

76 1983  இயக்கம் ஏப்ரிட் ஷைன்  எழுத்து பிபின் சந்திரன்

77 பாலேரி மாணிக்கம் ஒரு பாதிராக்கொலபாதகத்தின்றே கதா   இயக்கம் ரஞ்சித்   எழுத்து  டி.பி.ராஜீவன்

78 ஒரு மின்னாமினுங்கின்றே நுறுங்குவெட்டம்   இயக்கம் பரதன்   எழுத்து  ஜான் பால்

79 ஆர்ட்டிஸ்ட்   இயக்கம் சியாமப்பிரசாத்   எழுத்து  சியாமப்பிரசாத்

லிஜோ ஜோஸ் பல்லிச்சேரி

80 டேக் ஆஃப்   இயக்கம் மகேஷ் நாராயணன்   எழுத்து  பி.வி.ஷாஜிகுமார்

81 விடபறயும் மும்பே   இயக்கம் மோகன்   எழுத்து  மோகன்

82 சூடானி ஃப்ரம் நைஜீரியா   இயக்கம் சகரியா முகம்மது   எழுத்து  முஹாஸின் பராரி

83 ஸெல்லுலாய்ட்   இயக்கம் கமல்   எழுத்து  கமல்

84 களியாட்டம்   எழுத்து  ஜயராஜ்   எழுத்து  பலராம் மட்டன்னூர்

85 ‘ப்ரேமம்   இயக்கம் அல்போன்ஸ் புத்ரன்   எழுத்து  அல்போன்ஸ் புத்ரன்

86 மீசமாதவன்   இயக்கம் லால் ஜோஸ்   எழுத்து  ரஞ்சன் பிரமோத்

ஆஷிக் அபு

87 உதயனாணு தாரம்   இயக்கம் ரோஷன் ஆண்ட்ரூஸ்   எழுத்து  ஸ்ரீனிவாசன்

88 என்றே மாமாட்டிக்குட்டியம்மைக்கு   இயக்கம் ஃபாஸில்   எழுத்து  ஃபாஸில்

89 ஒந்நுமுதல் பூஜ்யம் வரே   இயக்கம் ரகுநாத் பலேரி   எழுத்து  ரகுநாத் பலேரி

90 எந்நு நின்றே மொய்தீன்   இயக்கம் ஆர்.எஸ்.விமல்  எழுத்து  ஆர்.எஸ்.விமல்

91 தேன்மாவின் கொம்பத்து   இயக்கம் பிரியதர்சன்   எழுத்து  பிரியதர்சன்

திலீஷ் போத்தன்

92 அச்சுவேட்டன்றே வீடு   இயக்கம் பாலசந்திர மேனன்  எழுத்து  பாலசந்திர மேனன்

93 ராஜாவின்றே மகன்   இயக்கம் தம்பி கண்ணந்தானம் – டென்னிஸ் ஜோசஃப்

94 கிலுக்கம்   இயக்கம்பிரியதர்சன்   எழுத்து  வேணு நாகவள்ளி

95 தேவாசுரம்   இயக்கம் ஐ.வி.சசி   எழுத்து  ரஞ்சித்

96 ராஜமாணிக்கம்   இயக்கம் அன்வர் ரஷீத்   எழுத்து  டி.ஏ.ஷாகீத்

ஷியாம் புஷ்கரன்

97 22 ஃபீமேல் கோட்டயம்   இயக்கம் ஆஷிக் அபு   எழுத்து  அபிலாஷ் எஸ். குமார், ஷியாம் புஷ்கரன்

98 ஸ்படிகம்   இயக்கம் பத்ரன்   எழுத்து  பத்ரன்

99 மேலேப்பறம்பில் ஆண்வீடு   இயக்கம் ராஜசேனன்   எழுத்து  ரகுநாத் பலேரி

100 இயோபின்றே புஸ்தகம்   இயக்கம் அமல் நீரத்   எழுத்து  கோபன் சிதம்பரம், ஷியாம் புஷ்கரன்

101 பரிணயம் – ஹரிஹரன்   எழுத்து  எம்.டி.வாசுதேவன் நாயர்.

 

 

 

முந்தைய கட்டுரைபொன்பரப்பி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26