ஈராக் போர் அனுபவங்கள் ஷாகுல் ஹமீது
ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் ,
நேற்று அமெரிக்காவின் பழைய தலைநகரமான பிலேடெல்பியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அங்குள்ள American revolution museum சென்றிருந்தேன்.அங்கு நான்கு நிமிடம் ஓடும் பிரிட்ஷ் – அமெரிக்க படைகளுக்கு நடந்த போர்காட்சி ஒன்று திரையிடப்பட்டது.அது எனக்கு குருசேத்ரா போர்க்காட்சிகளை நினைவுபடுத்தியது .குறிப்பாக மாலையில் போர் முடிந்தபின் இறந்த வீரர்களின் உடல்களை அகற்றும் காட்சி .
இப்போதெல்லாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு பார்பதற்கு என்ன இருக்கிறது என முன்பே தெரிந்துகொண்டு அவற்றை தேடிச்செல்லவே விரும்புகிறேன் .முன்பெல்லாம் கப்பலில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது சக பணியாளர்களுடன் அவர்கள் செல்லும் வணிக வளாகங்களுக்கு தேவையும் ,விருப்பமும் இன்றி சென்று வருவேன் .நீங்கள் வெண்முரசு எழுத தொடங்கிய இரண்டாயிரத்தி பதினான்காம் ஆண்டு ஜனவரியில் தான் உங்கள் தளத்திற்கு வந்தடைந்தேன் .அதன் பின் தான் என் கண்களே திறந்துள்ளது .
முன்பு செம்மறிஆட்டு கூட்டத்திலிருக்கும் ஒரு ஆடு போலதான் நானும் இருந்திருக்கிறேன் .இரண்டு மாதத்திற்கு முன் பிலேடெல்பியா வரும் முன் நம் குழும நண்பர் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் எழுதிய ஊரை தெரிஞ்சிகிட்டேன் கட்டுரைகளில் ஒன்றான பிலேதேல்பியா பற்றிய கட்டுரையை வாங்கி படித்துவிட்டு,மிக எளிதாக அந்த இடங்களை பார்த்துவந்தேன்.நேற்றும் என்னுடன் கப்பலிலிருந்து ஆறுபேர் வெளியே வந்தனர் .எல்லோரும் வழக்கம்போல் வணிக வளாகங்களில் நுழைந்துவிட நான் மட்டும் தன்னந்தனியாக பிலேடெல்பியா சென்று வந்தேன்.
சௌந்தர் ராஜன் எழுதிய கட்டுரை இணைத்துள்ளேன்.
https://m.facebook.com/story.php?story_fbid=977813972411709&id=193844824141965
ஷாகுல் ஹமீது.