சிற்பங்கள் ஒரு வேண்டுகோள்

அன்புள்ள அன்பர் ஜெயமோஹனுக்கு,

தாங்கள் எழுதிவரும் வரலாறு, பாரம்பரியம் பற்றிய பல கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். Sand blasting தடை செய்யபட்ட ஒன்று. மத்திய தொல்லியல் துறையோ, மாநில தொல்லியல் துறையோ அவற்றை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் இந்து (?) அற(?) நிலையத் துறையினர்தான் இத்தகைய தடை செய்யப்பட்ட செயல்களை தொடர்கிறார்கள். பாரம்பரிய சின்னங்களை எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்ற பால பாடம்கூடத் தெரியாத நபர்களை (காண்டிராக்டர்களை) வைத்து இப்பணிகள் காசை சுருட்டவே நடை பெறுகிறது. இதை எதிர்த்து ஒரு குரல் எழுப்பும் தன்னார்வு நிறுவனம் எங்களுடையது. கிராம மக்களுக்கு, நம் பாரம்பரிய சின்னங்களைப் பற்றி எடுத்துரைத்து, பல கோயில்களாஇ சுண்ணாம்பு, கல் போன்ற பழமை மிக்க பொருட்களை வைத்தே புனரமைப்பு செய்யும் குழு நாங்கள். சிமெண்ட், அக்ரிலிக் பெயிண்ட் போன்றவை எங்களிடையே தடை செய்யப்பட்ட பொருட்கள். இதற்காக சட்ட ரீதியான புகாரை கோர்ட்டில் சமர்பிக்க நல்ல வழக்குறைஞர் தெரிந்தால் சொல்லவும். ஆயிரம் சான்றுகள் – இந்து அற நிலையத்துறையினர் செய்யும் கோயில் புனரமைப்பு என்ற அடாவடிகளை, பழங்காலச்சின்னச் சிதைவுகளை படங்களாகவும், வீடியோக்களாகவும் காட்டத் தயார்.

அன்பன்

’ரீச்’ சந்திரசேகரன்.

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

முந்தைய கட்டுரைசொல்வனம், இவ்விதழ்
அடுத்த கட்டுரைநான்காவது கொலை !!! – 11